Breaking News

குடியுரிமை சட்டப் பிரிவு 6A செல்லும் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

குடியுரிமை சட்டப் பிரிவு 6A செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

வங்கதேசத்திலிருந்து அசாமில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சிறப்பு சட்டமாகும்!

 


1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் பிரிவு 6A-ஐ எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வியாழன் அன்று தனது தீர்ப்பை வழங்கியுள்ளது

இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சூர்ய காந்த், எம்.எம்.சுந்தரேஷ், ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து 2023 டிசம்பர் 12ஆம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது

ஜனவரி 1, 1966 முதல் மார்ச் 25, 1971-க்கு இடையில் வங்கதேசத்திலிருந்து அசாமுக்கு சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக 1985-ஆம் ஆண்டில் அசாம் ஒப்பந்தத்தில் பிரிவு 6ஏ இணைக்கப்பட்டது.

இருப்பினும், அசாமில் உள்ள சில பழங்குடியின குழுக்கள் இந்த சட்டப்பிரிவை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் குடியுரிமைச் சட்டம் 6ஏ சட்டப் பிரிவு செல்லும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் ஒரே தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

மேலும் குடியுரிமைச் சட்டப் பிரிவு 6ஏ செல்லும் என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சூர்ய காந்த், எம்.எம். சுந்தரேஷ் மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் வழங்கிய ஒருமித்த தீர்ப்பில், புதிதாக சட்டம் இயற்றும் உரிமை நாடாளுமன்றத்துக்கு உள்ளதாக தெரிவித்தனர். நீதிபதி ஜே.பி. பார்திவாலா மட்டும், குடியுரிமைச் சட்டப் பிரிவு 6 ஏ அரசிலமைப்புச் சட்டத்திற்கு எதிராக உள்ளதாக தீர்ப்பளித்தார். 

1 ஜனவரி 1966 க்கு முன் வங்காளதேசத்தில் இருந்து அசாமில் நுழைந்த புலம்பெயர்ந்தோருக்கு பிரிவு 6A குடியுரிமை வழங்கியது. ஜனவரி 1, 1966 மற்றும் மார்ச் 24, 1971 க்கு இடையில் அசாமில் நுழைந்த புலம்பெயர்ந்தோர், 10 ஆண்டுகளுக்கு வாக்களிக்கும் சலுகைகளைத் தவிர்த்து இந்திய குடிமக்களாகக் கருதப்பட்டனர். நீதிபதி பார்திவாலா தனது மறுப்பில், சட்டத்தின் போது 6A பிரிவு செல்லுபடியாகும் என்றாலும், காலப்போக்கில், அது “தற்காலிகமாக குறைபாடுடையதாக மாறிவிட்டது என்று கூறினார்.=

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback