Breaking News

பெங்களூரில் சோகம் 7 மாடி கட்டிடம் சரிந்து விழுந்து விபத்து பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

பெங்களூரில் சோகம் அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விழுந்து விபத்து பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. சிசிடிவி வீடியோ


பெங்களூருவில் உள்ள ஹென்னூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த அடுக்குமாடி கட்டிடம் ஒன்று கனமழைக்கு தாங்காமல் நேற்று (அக்.22) மாலை இடிந்து விழுந்தது. 

இதில் 7 தளங்களைக் கொண்ட அக்கட்டிடத்தில் பணிபுரிந்த 20 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். 

உடனடியாக தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்தும், அங்கு விரைந்து வந்த அதிகாரிகள் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். இதில் 6 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

பெங்களுருவில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி குடியிருப்பு, கண்ணிமைக்கும் நேரத்தில் சரிந்த காட்சி.  இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

விபத்து சிசிடிவி வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.adminmedia.in/2024/10/blog-post_77.html

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback