பள்ளபட்டியில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து 7 ம் வகுப்பு மாணவன் முகமது உஸ்மான் உயிரிழப்பு முழு விவரம்
பள்ளபட்டியில் கழிவுநீர் வடிகாலில் தவறி விழுந்து 7 ம் வகுப்பு மாணவன் முகமது உஸ்மான் உயிரிழப்பு முழு விவரம்
கழிவுநீர் வடிகாலில் தவறி விழுந்து அடித்துச் செல்லப்பட்ட 7ம் வகுப்பு மாணவன் சடலமாக மீட்பு!
கரூர் மாவட்டம் பள்ளபட்டியில் ஐசிசி வங்கி எதிரில் பள்ளி சென்று சைக்கிளில் வீடு திரும்பிய 7ம் வகுப்பு மாணவன் முகமது உஸ்மான் (14) தவறி கால்வாயில் விழுந்துளார்
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த வீட்டின் மேலே இருந்து பார்த்த ஒரு பெரியவர் ஓடி வந்து பார்த்தபோது சைக்கிள் மட்டும் இருந்துள்ளது
ஆனால் அந்த சிறுவன் காணவில்லை உடனடியாக காவல்துறைக்கு தகவல் தந்ததின் அடிப்பையில் போலீசாரும் நகராட்சி நிர்வாகமும் சிறுவனை தேடினார்கள் ,
கனத்த மழை பெய்ததால் கால்வாயில் நீர் அதிகமாக இருந்தது அதில் சிறுவன் அடித்து செல்லப்பட்டு அருகில் இருந்த ஓடையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார், சடலத்தை மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சிறுவன் கழிவுநீர் வடிகாலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags: தமிழக செய்திகள்