Breaking News

70 வயதிற்க்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ கட்டணம் இலவசம் புதிய காப்பீடு திட்டம் Ayushman Vaya Vandana Card apply

அட்மின் மீடியா
0

70 வயதிற்க்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ கட்டணம் இலவசம் புதிய காப்பீடு திட்டம் Ayushman Vaya Vandana Card apply

புதிய திட்டம்:-

Ayushman Vaya Vandana என்ற இந்த புதிய திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அதன்பின்னர் பேசிய மோடி, மத்திய அரசின் திட்டங்களில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஒரு மைல் கல்லாக அமையும். இதன் மூலம் குடும்பத்தில் முதியோருக்கான மருத்துவ செலவுகள் குறையும் என்பதால் முழு குடும்பமுமே பலன் அடையும் என்று தெரிவித்தார்.

காப்பீடு பலன்கள்:-

70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு ரூ. 5 லட்சம் வரையில் கட்டணமில்லா மருத்துவம் 

இந்த புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை பணமில்லா கவரேஜை வழங்குகிறது. 

70 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள அனைவருக்கும் இந்த காப்பீடு கிடைக்கும்.

உயிருக்கு ஆபத்தான நோய்களான புற்றுநோய்,சிறுநீரக நோய்,இதயம் சம்மந்தபட்ட நோய்,மூட்டு வலி, கல்லீரல் நோய் போன்ற பல நோய்களுக்கு இந்த இலவச காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்

விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://beneficiary.nha.gov.in/vayovridhasearch

ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்க முதலில் மேல் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்

அடுத்து அதில் உங்கள் ஆதார் கார்டு எண்ணை பதிவிட்டு கீழ் உள்ள கேப்சாவை பதிவிட்டு சர்ச் செய்யுங்கள்

அடுத்து உங்களை பற்றிய விவரங்கள் வரும் சரிபார்த்து தேவையான ஆவணங்கள் கொடுத்து அடுத்து வரும் ஒடிபி பதிவிட்டு உங்கள் கார்டை டவுன்லோடு செய்ய்யுங்கள்

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback