Breaking News

தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு 8 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்TN Prosecution Department Recruitment 2024

அட்மின் மீடியா
0
NOTICE FOR RECRUITMENT OF OFFICE ASSISTANT NOTICE NO.1/2024 DATED.18.10.2024 
 
அலுவலக உதவியாளர் பதவிக்கான விளம்பர அறிவிக்கை அறிவிக்கை எண். 1/2024 நாள்:18-10-2024
 
தர்மபுரி மாவட்டம், குற்ற வழக்குத் தொடர்வுத் துறை, உதவி இயக்குநர் அலுவலகக் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞருக்கென ஒப்பளிக்கப்பட்டு காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 05-11-2024 மாலை 05.45 மணிவரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 

பதவியின் பெயர் 
 
அலுவலகஉதவியாளர் 
 
பணியின் தன்மை 
 
தர்மபுரி மாவட்டம், குற்ற வழக்குத் தொடர்வுத் துறை உதவி இயக்குநர் அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞர் அவர்களுக்கு அடிப்படை பணிகளை மேற்கொள்வதில் உதவிசெய்தல், அலுவலக நடைமுறைப் பணிகளில் உதவிடுதல்.
 
வயது வரம்பு:-
 
குறைந்தபட்சவயது 01.07.2024 அன்று 18 பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு (01-07-2024 அன்றுள்ளவாறு) 32 வயது பொதுப் பிரிவு (GT) பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட 34 வயது 
 
கல்வித் தகுதி :-
 
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் 
 
மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும் 
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டிய முகவரி 
 
உதவி இயக்குநர் அலுவலகம், 
 
குற்ற வழக்குத் தொடர்வுத் துறை, 
 
ஆயுதப்படை காவலர் பயிற்சி வளாகம், 
 
வெண்ணம்பட்டி ரோடு, 
 
தர்மபுரி மாவட்டம் - 636 705 10. 
 
விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசிநாள்:-
 
05-11-2024 மாலை 05.45 மணி வரை 
 
பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. மேற்கண்ட நியமனத்திற்கான நேர்காணலை ஒத்திவைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இரத்து செய்யவோ, தர்மபுரி மாவட்டம், குற்ற வழக்குத் தொடர்வுத் துறை உதவி இயக்குநர் அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. மேலும், தேவைப்படின் மேற்படி பணியிடத்திற்கு எழுத்துத் தேர்வும் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளை தவறாது பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
 
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://dharmapuri.nic.in/notice/notification-for-office-assistant/

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback