Breaking News

தீபாவளி மறுநாள் விடுப்பை ஈடுசெய்ய நவ.9 ம் தேதி வேலை நாள் தமிழக அரசு அறிவிப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

தீபாவளி மறுநாள் விடுப்பை ஈடுசெய்ய நவ.9 வேலை நாள் தமிழக அரசு அறிவிப்பு முழு விவரம்



தீபாவளி மறுநாள் விடுமுறையை ஈடு செய்ய நவ.9-ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநில அரசு சாா்பில் வெளியிடப்பட்ட உத்தரவு:

தீபாவளிக்கு அடுத்த நாளான நவ.1-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவ.9-ஆம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை 31.10.2024 வியாழக்கிழமை அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு - தீபாவளிக்கு அடுத்த நாள் 01.11.2024 வெள்ளிக் கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு கொண்டாடஅலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.

இவ்வாண்டு, 31.10.2024 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று விழாவினை மகிழ்வுடன் கொண்டாடி திரும்புவதற்கு ஏதுவாக, 01.11.2024 வெள்ளிக்கிழமை அன்று ஒருநாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள். கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு பலதரப்பிலிருந்தும் கோரிக்கைகள் அரசுக்கு வரப்பெற்றன. 

.

அக்கோரிக்கைகளை, அரசு கவனமுடன் பரிசீலித்து, தீபாவளிக்கு அடுத்த நாளான 01.11.2024 வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து, அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 09.11.2024 (சனிக்கிழமை)  அன்று பணிநாளாக அறிவித்து ஆணை வெளியிடப்படுகிறது.

மேற்கண்ட உள்ளூர் விடுமுறை தினமானது செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instruments Act, 1881)-கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவசர அலுவல்களை மேற்கொள்ளும் பொருட்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கருவூலங்கள், சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படுவதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback