மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக்கொலை Baba Siddique Shot Dead
மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக்கொலை Baba Siddique Shot Dead
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பாபா சித்திக், மும்பையின் பாந்த்ரா கிழக்கில் நேற்று இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மஹாராஷ்டிர முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக்கை நேற்று இரவு மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிராவில், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசை சேர்ந்தவர் பாபா சித்திக். அம்மாநில முன்னாள் அமைச்சரான இவர் மும்பை நிர்மல் நகர் பகுதியில் உள்ள தன் அலுவலகத்தில் இருந்து நேற்று இரவு வெளியே வந்து காரில் ஏறி அமர்ந்த போது அவரது காரை சுற்றி பட்டாசுகளை வெடிக்க செய்த மர்ம கும்பல் காரில் இருந்த சித்திக் மீது திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு தப்பினர்.
இதில் வயிறு மற்றும் மார்பில் குண்டுகள் பாய்ந்தன.மயங்கி சரிந்த சித்திக்கை அப்பகுதியினர் மீட்டு அங்குள்ள லீலாவதி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் பாபா சித்திக் உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இது சம்மந்தமாக 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்