ஜக்கி வாசுதேவ் தனது மகளுக்கு மட்டும் திருமணம்! மற்ற பெண்களை சந்நியாசியாக்குவது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி
ஜக்கி வாசுதேவ் மகள் திருமணம் செய்துள்ள நிலையில் அடுத்த வீட்டுப் பெண்களை சந்நியாசிகளாக ஏன் ஊக்குவிக்கிறார் என உயர்நீதிமன்றம் கேள்வி Jackie Vasudev married only to his daughter! The High Court asked why other women were made ascetics
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் எஸ்.காமராஜ் காமராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தனது மூத்த மகள் 2003 ஆம் ஆண்டு மெக்கட்ரானிக்ஸ் துறையில் பொறியியல் பட்டம் பெற்று இங்கிலாந்தில் எம்.டெக் பட்டம் பெற்றதாகவும் 2007 இல் அமெரிக்காவில் வசிக்கும் ஒருவரைத் திருமணம் செய்து கொண்ட அவர் விவாகரத்து பெற்ற நிலையில் ஈஷா அறக்கட்டளையில் யோகா வகுப்புகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து எனது இளைய மகள், என இருவரும் யோகா மையத்தில் நிரந்தரமாக வசிக்கத் தொடங்கினார்
இது தொடர்பாக ஏற்கனவே ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தபோது, சென்னை உயர்நீதிமன்றம் கோவை மாவட்ட நீதிபதி ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டதன் அடிப்படையில், இருவரும் சில நாட்கள் வெளியே தங்கி இருக்க வேண்டும், அதன்பின் மனநிலையை ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளதாக சுட்டி காட்டியுள்ளார்.]
மேலும் தங்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று மகள்கள் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், இதன் காரணமாக தானும் தனது மனைவியும் மன ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் வி. சிவஞானம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஈஷா யோகா மையத்தில் அடைபட்டிருப்பதாகக் கூறப்படும் இரு பெண்களும் நீதிபதி முன் ஆஜரானார்கள்.
அப்போது கோவை வெள்ளிகிரி மலையடிவாரத்தில் உள்ள யோகா மையத்தில் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரிலேயே நாங்கள் துறவிகளாக தங்கியிருப்பதாகத் தெரிவித்தனர்.
மேலும் வயது வந்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் தங்கள் சொந்த பாதையைத் தேர்வுசெய்ய சுதந்திரம் உள்ளது என்று வழக்கறிஞர் பதிலளித்தார்.
தனது மகளுக்கு திருமணம் செய்து கொடுத்து வாழ்க்கையில் நல்லபடியாக வாழவைத்தவர், பிறருடைய மகள்களை மொட்டையடித்து துறவு வாழ்க்கையை வாழத் தூண்டுவது ஏன் என்பதை அறிய விரும்புகிறோம். அதுதான் சந்தேகம்' என்று நீதிபதி சிவஞானம் கூறினார்.
வயது வந்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் தங்கள் சொந்த பாதையைத் தேர்வுசெய்ய சுதந்திரம் உள்ளது என்று வழக்கறிஞர் பதிலளித்தார்.
மேலும் நீங்கள் ஆன்மீகப் பாதையில் செல்வதாகக் கூறுகிறீர்கள். உங்கள் பெற்றோரைப் புறக்கணிப்பது பாவம் என்று நீங்கள் நினைக்கவில்லையா?
அனைவரையும் நேசி, யாரையும் வெறுக்காதே' என்பது பக்தியின் கொள்கை, ஆனால் உங்கள் பெற்றோரின் மீது உங்களுக்குள்ள வெறுப்பை எங்களால் பார்க்க முடிந்தது. நீங்கள் அவர்களை மரியாதையுடன் கூட பேசவில்லை' என்று நீதிபதி கூறினார்.
ஈஷா அறக்கட்டளை தொடர்பாக பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாக குறிப்பிட்ட மனுதாரரின் வழக்கறிஞர் எம். புருஷோத்தமன், சமீபத்தில் கூட அங்கு பணியாற்றும் மருத்துவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்,
இதையடுத்து ஈஷா அறக்கட்டளை தொடர்பான அனைத்து வழக்குகளையும் அக்டோபர் 4-ம் தேதிக்குள் பட்டியலிட்டு தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் இ.ராஜ் திலக்கிடம் உத்தரவிட்டனர்.
Tags: தமிழக செய்திகள்