Breaking News

ஈரான் மீது குண்டுமழை பொழிந்த இஸ்ரேல் வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0

ஈரான் மீது குண்டுமழை பொழிந்த இஸ்ரேல் வீடியோ இணைப்பு 

மேற்கு ஆசிய நாடுகளில் மீண்டும் போர் பதற்றம் ஈரான் மீது மீண்டும் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்

கடந்த 2 ம் தேதி ஈரான் நடத்திய வான்வெளி தாக்குதலுக்கு இன்று இஸ்ரேல் சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் சார்பில் ஈரான் தலைநகர் டெக்ரான் மற்றும் கராஜ் நகரங்களில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது

ஈரானில் உள்ள ராணுவ இலக்குகள் மீது தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவிப்பு, தெஹ்ரான் பகுதியில் உள்ள ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல்.

தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் :-

ஈரானில் இருந்து இஸ்ரேல் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் ஈரான் ராணுவ நிலைகள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக பதிவிட்டுள்ளது. 

நவம்பர் 5 ஆம் தேதி ஈரான் அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இஸ்ரேல் தாக்குதலை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஈரான் நாட்டு அரசு தனது ராணுவ வீரர்களிடம் போருக்கு தயாராகும்படி உத்தரவிட்டது, இஸ்ரேலின் இந்த தாக்குதல் ஆகியவை போர் பதற்றத்தை அதிகரித்துள்ளதால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன.

ஈரான் மீது ஏவப்பட்ட ஏவுகணைகளை வானிலே வழிமறித்து அழித்த ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1850009065516302675

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback