டிகிரி படித்த பெண்களுக்கு சமுதாய அமைப்பாளர் வேலை வாய்ப்பு முழு விவரம் தெரிந்து கொள்ள
டிகிரி படித்த பெண்களுக்கு சமுதாய அமைப்பாளர் வேலை வாய்ப்பு முழு விவரம் தெரிந்து கொள்ள
நகர்ப்புற வாழ்வாதார மையம் (CLC) திருநெல்வேலி மாவட்டம் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின்கீழ், திருநெல்வேலி மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் திருநெல்வேலி மாநகராட்சி / பேரூராட்சி பகுதிகளில் காலியாக உள்ள வெளிஆதார முறையில் தற்காலிகமாக சமுதாய அமைப்பாளராக பணிபுரிவதற்கு ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு முடித்த, 01.07.2024 தேதியில் 35 வயதிற்குட்பட்ட, இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ள தகுதிவாய்ந்த பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. என மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் அறிவித்துள்ளார்
திருநெல்வேலி மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் திருநெல்வேலி மாநகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வெளிஆதார முறையில் நிரப்பப்பட உள்ள ஒப்பந்த அடிப்படையிலான சமுதாய அமைப்பாளர் பணியிடங்களுக்கு திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் ஏதாவதொரு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்போர் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
தகுதியும் விருப்பமும் உள்ளோர் https://tirunelveli.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து வரும் 10 ஆம் தேதிக்குள் மேலாளர், நகர்ப்புற வாழ்வாதார மையம், மாவட்ட பூமாலை வணிக வளாகம், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில், திருநெல்வேலி மாவட்டம். என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தபால் முகவரி:-
மேலாளர், நகர்ப்புற வாழ்வாதார மையம்,
மாவட்ட பூமாலை வணிக வளாகம்,
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில்,
திருநெல்வேலி மாவட்டம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
10.10.2024
விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்
https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2024/09/2024092496.pdf
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2024/09/2024092411.pdf
Tags: வெளிநாட்டு செய்திகள் வேலைவாய்ப்பு