Breaking News

ரயில் விபத்திற்க்கான காரணம் என்ன? விபத்து நடந்தது எப்படி? முழு விவரம்

அட்மின் மீடியா
0

ரயில் விபத்திற்க்கான காரணம் என்ன? விபத்து நடந்தது எப்படி? முழு விவரம்

மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி எஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது, பெரம்பூரில் இருந்து 7.44 அளவில் புறப்பட்ட இந்த ரயில், 8.27 மணியளவில் கவரைப்பேட்டை அருகே வந்துள்ளது அப்போது  தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்புறத்தில் வேகமாக வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது

இந்த விபத்தில் பயணிகள் விரைவு ரயிலின் 12 பெட்டிகள் தடம்  புரண்டு 2 பெட்டிகள் எரிந்தது , ரயில் நிலையம் அருகிலேயே விபத்து நடந்ததால் உடனடியாக பொதுமக்களும் அங்கிருந்த ரயில்வெ போலீசார் மற்றும் ரயில்வே ஊழியர்களும் விரைவாக பயணிகளை மீட்டனர் இதனால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை,விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது

ரயில் விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட உள்ளது.

இந்தக் குழுவினர் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்வர். ரயிலை இயக்குதல், சிக்னல், தொழில்நுட்ப கோளாறுக்கான காரணங்களை ஆராய்ந்து அதன் அறிக்கையை சமர்ப்பிப்பர்.மனிதத் தவறா அல்லது தொழில்நுட்ப கோளாறுகள் காரணமா கண்டுபிடிக்கப்பட்டு, அதன்படி உயர்மட்டக் குழுவினர் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்வர்.

தவறான சிக்னல் காரணமாக ரயில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரவு 8.27 மணியளவில் பச்சை சிக்னல் கொடுக்கப்பட்டதால் ரயில் இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback