Breaking News

ஜம்மு காஷ்மீரில் ஆட்சியை பிடிக்கிறது இந்தியா கூட்டணி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முழு நிலவரம்

அட்மின் மீடியா
0

ஜம்மு காஷ்மீரில் ஆட்சியை பிடிக்கிறது இந்தியா கூட்டணி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முழு நிலவரம்


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அதன் பின்னர் அங்கு நடந்த ஆட்சியை பாஜக கவிழ்த்து  ஆளுநர் ஆட்சி நடைபெற்றது.

அதன்பின்பு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீரில் இருந்து லடாக் தனியே பிரிக்கப்பட்டது.அதோடு ஜம்மு காஷ்மீருக்கான 370 சிறப்பு சட்டமும் பறிக்கப்பட்டது. 

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரிலுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 3 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலை காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, சிபிஎம் ஆகிய கட்சிகள் இந்தியா கூட்டணி சார்பில் ஒரே அணியாக போட்டியிட்டன.

ஜம்மு காஷ்மீரில் பெரும்பான்மைக்கு தேவையான 46 இடங்களை விட அதிக இடங்களில் இந்தியா கூட்டணி முன்னணி வகிக்கும் நிலையில் இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிப்பது உறுதியாகியுள்ளது.

தேசிய மாநாட்டு கட்சி தனித்து 41 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும், சிபிஎம் 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. 

பாஜக 28 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் மெகபூவா முக்தி தலைமையிலான ஜம்மு காஷ்மீர் மக்கள் சனநாயக கட்சி 4 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்:-

Jammu & Kashmir National Conference - JKN 41 

Bharatiya Janata Party - BJP 29 

Indian National Congress - INC

Jammu & Kashmir Peoples Democratic Party - JKPDP

Jammu & Kashmir People Conference - JPC

Communist Party of India (Marxist) - CPI(M)

Aam Aadmi Party - AAAP

Independent - IND

Total 90

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback