Breaking News

தமிழகத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை முழு விவரம்

அட்மின் மீடியா
0
கனமழை எச்சரிக்கையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (15/10/2024) விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (15/10/2024) விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக 

சென்னை, 

திருவள்ளூர், 

செங்கல்பட்டு 

காஞ்சிபுரம் 

விழுப்புரம்

கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

அடுத்துவரும் நாள்களில் பெருமழை பெய்யலாம் என முன்னுரைக்கப்பட்டுள்ளதால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்குச் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டதை அடுத்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கட்கிழமையன்று அமைச்சர்களுடனும் அதிகாரிகளுடனும் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முன்னேற்பாடுகளையும் எடுக்குமாறு அறிவுறுத்திய அவர், கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களைத் தீவிரமாகக் கண்காணிக்கவும் வலியுறுத்தினார்.

இதற்காக, சென்னையில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய வடமாவட்டங்களில் பெருமழை பெய்யும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, முன்னெச்சரிக்கையாக அங்குள்ள கல்வி நிலையங்களுக்குச் செவ்வாய்க்கிழமை ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தங்கள் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தந்து, இவ்வார இறுதிவரை அவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குத் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

சுற்றுலாத் தலங்கள், கடற்கரை, வழிபாட்டுத் தலங்கள், நீர்நிலைகள் ஆகிய பகுதிகளில் மக்கள் கூட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பருவமழையை எதிர்க்கொள்ள அனைத்து மாவட்டங்களும் தயார் நிலையில் உள்ளது என தலைமைச்செயலாளர் முருகானந்தம் தெரிவித்தார்.

தலைநகர் சென்னைக்கு செவ்வாய்க்கிழமை ஆரஞ்சு எச்சரிக்கையும் அதற்கு மறுநாள் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கடந்த காலங்களில் பெருமழை பெய்தபோது சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் அடிப்படையில் ஏறக்குறைய 180 இடங்களைக் கண்டறிந்து, அங்குக் கூடுதல் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்குச் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக, மெட்ரோ ரயில் பணிகள் நடக்கும் இடங்களில் மழைநீர் தேங்கக்கூடிய 25 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அத்துடன் பருவமழை முடியும் வரை அவசரகாலப் பணிகளைத் தவிர்த்து, சாலைத் தோண்டும் பணிகளுக்கு அனுமதி இல்லை என்றும் 172 துயர்துடைப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியின் 21,000 ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback