Breaking News

ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் பல்வேறு நாடுகள் கண்டனம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

ஈரான் கடந்த 1ம் தேதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ஈரான் மீது பதிலடி தாக்குதல் நடத்தி உள்ளது. முழுக்க முழுக்க திட்டமிட்டு முறையாக  தாக்குதலை நிகழ்த்தி உள்ளது இஸ்ரேல். ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு சவூதி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளது.

 


சவூதி அரேபியா

சவூதி அரேபியா இந்த தாக்குதலை கண்டிக்கிறது. இஸ்ரேலிய நாட்டின் தாக்குதலுக்கு எங்களின் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவிக்கிறோம். மத்திய கிழக்கில் உள்ள நாடுகளின் மற்றும் மக்களின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இந்த தாக்குதல் நடந்து உள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல் அதிகரிப்பதை தடுக்கும் வகையில்.. உறுதியான நிலைப்பாட்டை நாடுகள் எடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.

 அமெரிக்கா:-

இதுகுறித்து கூறுகையில், ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் அமெரிக்காவின் ஆலோசனையோ ஒத்துழைப்போ நேரடியாக இல்லை என தெரிவித்துள்ளது.மத்திய கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் நடைபெறும் நிகழ்வுகளையும் சூழலையும் உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

ஐக்கிய அரபு அமீரகம்: 

ஈரான் மீதான இஸ்ரேலின் ராணுவத் தாக்குதலை கண்டித்துள்ள ஐக்கிய அரபு அமீரகம், பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு எதிரான தொடர்ச்சியான மோதல் விரிவாக்கம் மற்றும் அதன் தாக்கம் குறித்தும் கவலை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து: 

இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கக் கூடாது என்று இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார். 

ஈரானின் ஆக்கிரமிப்புக்கு எதிராக தற்காத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உண்டு என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அதேநேரத்தில் பிராந்தியத்தில் மோதல்கள் மேலும் விரிவடைந்து செல்வதை தவிர்க்க வேண்டும் ஈரான் பதிலடி கொடுக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1850009065516302675

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback