காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா நோக்கி கரையை கடப்பதால் அதி கனமழைக்கான வாய்ப்பு இல்லை - பிரதீப் ஜான் தனியார் வானிலை ஆர்வலர்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா நோக்கி கரையை கடப்பதால் அதி கனமழைக்கான வாய்ப்பு இல்லை - பிரதீப் ஜான் தனியார் வானிலை ஆர்வலர்
சென்னையில் இன்று அதி கன மழைக்கான வாய்ப்பிருப்பதாக ரெட் அலெர்ட் விடுக்கப்பட்ட நிலையில், மேகக் கூட்டங்கள் தற்போது தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்து செல்வதால் சென்னைக்கு இனி அதி கன மழைக்கான வாய்ப்பு இல்லை என வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
காற்றழுத்த தாழ்வு நிலை சென்னை அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா நோக்கி கரையை கடப்பதால் காற்று கடக்கும் பகுதிக்கு வடக்கே இருப்பதால் சென்னை மக்கள் பயப்படத்தேவை இல்லை
சென்னையில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலத்தில் நகரும் போது, சாதாரணமாக சமாளிக்கக்கூடிய மழையாக இருக்கும். எனவே மேம்பாலங்களில் நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தை வீட்டிற்கு கொண்டு செல்லலாம்
மேலும் சென்னையில் இன்று அதி கனமழைக்கான வாய்ப்பு குறைவு சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களில் மிதமான மழையையே எதிர்பார்க்கலாம். என பிரதீப் ஜான்தனியார் வானிலை ஆர்வலர் தெரிவித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்