திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து முழு விவரம்
அட்மின் மீடியா
0
சென்னையை அடுத்த கவரப்பேட்டை பகுதி அருகே சரக்கு ரயிலும் , பயணிகள் ரயிலும் மோதி விபத்து
மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி எஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது, பெரம்பூரில் இருந்து 7.44 அளவில் புறப்பட்ட இந்த ரயில், 8.27 மணியளவில் கவரைப்பேட்டை அருகே வந்துள்ளது அப்போது தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்புறத்தில் வேகமாக வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது
இந்த விபத்தில் பயணிகள் விரைவு ரயிலின் 4 ஏசி பெட்டிகள் தடம் புரண்டு 2 பெட்டிகள் எரிந்து வருகின்றன. ரயிலில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது
ரயில்கள் விபத்துக்குள்ளான இடத்திற்கு ரயில்வே அதிகாரிகள், மீட்புகுழுவினர் விரைந்துள்ளனர்
Tags: தமிழக செய்திகள்