ஜாமீனில் எடுத்த வக்கீலையும் அவரது மனைவியையும் வெட்டிய ரவுடி சேலத்தில் பரபரப்பு
ஜாமீனில் எடுத்த வக்கீலையும் அவரது மனைவியையும் வீடு புகுந்து வெட்டிய ரவுடி
சேலம் மாநகர் சின்னத்திருப்பதி புதிய குருக்கள் காலனியை சேர்ந்தவர் ஆஷித்கான் (30). இவர் சேலம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவரும் இவரது மனைவி பத்மப்பிரியா ஆகிய இருவரும் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்தனர். அப்போது அவரது கட்சிக்காரரான பிரபல ரவுடியான செவ்வாய்பேட்டையை சேர்ந்த ஜோசப் என்கிற என்கிற பாலாஜி வக்கீல் வீட்டிற்கு வந்துள்ளார்.
பேசிக் கொண்டிருந்த சிறிது நேரத்தில் வழக்கறிஞர் ஆசித்கானுக்கும், ரவுடி பாலாஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென வழக்கறிஞரை, ரவுடி பாலாஜி தாக்கியுள்ளார்
அலறல் சத்தம் கேட்டு வந்த அவரது மனைவி பத்மபிரியா தடுக்க வந்துள்ளார். அவருக்கும் கையில் வெட்டி விழுந்துள்ளது. இதனால் அவர்கள் கூச்சலிட்டுள்ளனர். இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் தடுக்க ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதைக் கண்ட ரவுடி பாலாஜி தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடி விட்டார்.
வழக்கறிஞர் ஆஷித்கான் மற்றும் அவரது மனைவி பத்மப்ரியா ரத்த காயங்களுடன் இருப்பதை பார்த்து, உடனடியாக அவர்களை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கன்னங்குறிச்சி போலீசார் சம்பவம் இடம் சென்று விசாரணை நடத்தினர். வழக்கறிஞர் ஆஷித்கான் மற்றும் அவருடைய மனைவி ஆகியோரை வெட்டி விட்டு தப்பிய ரவுடி பாலாஜி மீது நான்கு பிரிவில் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.எதற்காக வழக்கறிஞரை ரவுடி பாலாஜி வெட்டினார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவான ரவுடி பாலாஜியை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்