Breaking News

அதிமுக கட்சி பொறுப்புகளில் இருந்து தளவாய் சுந்தரம் நீக்கம் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

கன்னியாகுமரியில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை தொடங்கி வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம்!


பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் முக்கிய அறிவிப்பு 



கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் வகையில் செயல்பட்டதாகவும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு முரணான மாறுபட்டு நடந்துகொண்டதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டி இருப்பதால், 

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திரு. என். தளவாய்சுந்தரம், M.L.A., அவர்கள், தான் வகித்து வரும் கழக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback