Breaking News

இந்தியாவை விட்டு கனடா தூதர் வெளியேற உத்தரவு காரணம் என்ன முழு விபரம்

அட்மின் மீடியா
0

இந்தியாவில் உள்ள கனடாவின் 6 தூதரக அதிகாரிகளை வெளியேற்றி இந்தியா அதிரடி உத்தரவு!

கனடாவின் உயர் தூதரக அதிகாரி Stewart Ross-ஐயும் வெளியேற்றி இந்தியா உத்தரவு

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்தாண்டு ஜூனில் கனடாவில் கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியது இருநாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தியது. 

இச்சூழலில் ஹர்தீப் கொலையில் இந்திய தூதரக உயர் அதிகாரி சஞ்சய் குமார் வர்மா மற்றும் பிற இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம்சாட்டியது. 



இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்தியா கனடாவின் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது. 

இந்நிலையில் டெல்லியில் உள்ள கனடா தூதரக பொறுப்பு அதிகாரி ஸ்டூவர்ட் வீலருக்கு மத்திய வெளியுறவு அமைச்சக செயலாளர் (கிழக்கு) நேற்று மாலை சம்மன் அனுப்பினார். இதன் அடிப்படையில் ஆஜரான வீலரிடம் கனடா அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப் பட்டது. 

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்:-

கனடாவில் உள்ள இந்திய தூதர் மற்றும் பிற தூதரக அதிகாரிகள் மீது ஆதாரமின்றி குற்றம் சாட்டி இருப்பதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அந்நாட்டு தூதரக பொறுப்பாளரிடம் தெரிவிக்கப்பட்டது.

தீவிரவாதம் மற்றும் வன்முறை சூழலில், ட்ரூடோ அரசின் நடவடிக்கைகள் இந்திய அதிகாரிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் தற்போதைய கனடாஅரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, அங்குள்ள இந்திய தூதர் மற்றும் பிற அதிகாரிகளை திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம் என அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Tags: இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback