Breaking News

கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் தமிழ்நாடு அரசு அறிவிப்பு





இது குறித்து வெளியிட்டுள்ள அரசாணையில்:-

திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன்படி, மிகை ஊதியம் பெற தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21,000 ஆகஉயர்த்தப்பட்டுள்ளது. 

இதன்படி, மிகை ஊதியம் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பு ரூ.7,000 ஆகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி மாதாந்திர சம்பள உச்சவரம்பான ரூ.21,000-ஐ தளர்த்தி, அனைத்து 'சி', 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 2023-24-ம் ஆண்டுக்கான மிகை ஊதியம், கருணை தொகை வழங்கப்படும்.

                                

இதன்படி, இலாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கத்தில் பணிபுரியும் 'C' மற்றும் 'D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கப்படக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். 

போனஸ் சட்டத்தின்கீழ் வராத தலைமைச் சங்கங்கள், மத்திய சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம், தொடக்க சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.2400-ம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback