Breaking News

அதிமுக கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளராக கவுதமி நியமனம் - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 அதிமுக கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளராக கவுதமி நியமனம்   - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

பாஜகவிலிருந்த விலகி அதிமுகவில் இணைந்த .நடிகை கவுதமிக்கு அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியும் தடா பெரியசாமிக்கு எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. P.சன்னியாசி அவர்கள் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் மற்றும் கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திரைப்பட நடிகை திருமதி கௌதமி அவர்கள் (பேவாட்ச் பண்ணை 3-ஆவது தெரு, வெட்டுவான்கேணி, சென்னை) 

துணைச் செயலாளர் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் திரு. தடா து. பெரியசாமி அவர்கள் பிசாசர் சயனி லிட்டக்குடி தாலுகா




Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback