Breaking News

நகை வியாபாரியின் வீடு புகுந்த முகமூடி கொள்ளையர்களை தனி ஆளாக விரட்டிய சிங்கப்பெண் வைரலாகும் சிசிடிவி காட்சி

அட்மின் மீடியா
0

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் முகமூடி அணிந்த 3 திருடர்கள் வீட்டுக்குள் நுழைய முயன்றதை அறிந்து தனி ஆளாக கதவுக்கு பின்னால் நின்று உள்ளே நுழையவிடாமல் தடுத்த பெண் வைரல் வீடியோ

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் வீட்டிற்குள் நுழைய முயன்ற கொள்ளையர்களை ஒற்றையாளாக தடுத்து நிறுத்திய மந்தீப் கவுர் என்ற பெண். சிசிடிவி காட்சிகள் வெளியாகின.

மந்தீப் கவுரின் கணவர் ஜக்ஜீத் சிங் ஒரு நகை வியாபாரி என்பதால், அவரது வீட்டை குறிவைத்து திருட முயன்றிருக்கலாம் என போலீஸ் சந்தேகம்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியை சேர்ந்தவர் மந்தீப் கவுர் இவரது கணவர் ஜக்ஜீத் சிங் நகை வியாபாரி  இந்நிலையில் திங்கட்கிழமை மாலை வீட்டில் மந்தீப் கவுர் தனது 2 குழந்தைகளுடன் தனியாக இருந்தபோது வீட்டின் அருகே அடையாளம் தெரியாத நபர்கள் முகமூடி அணிந்து வீட்டின் சுவர் ஏறி குதித்து கொள்ளையடிக்க வந்தனர்

இதனை கண்ட மந்தீப் கவுர் உடனே கொள்ளையர்களை தனது வீட்டில் நுழைய விடாமல் தடுத்து கதவை அடைத்தார்.அவர்கள் கதவை தள்ளி உள்ளே புகுந்துவிட முயன்றனர். 

கதவைத் திறக்க விடாமல் தாங்கிப் பிடித்தபடியே அருகில் இருந்த சோபாவை இழுத்து கதவோடு அணைத்துவைத்து கொள்ளையர்களை உள்ளே வரவிடாமல் தடுத்து நிறுத்துகிறார்.

அதையும் அவர்கள் உடைக்க முயன்ற போது வீட்டில் இருந்த சோபாவை இழுத்து கதவு அருகில் போட்டார். மேலும் கூச்சல் எழுப்பி அக்கம்பக்கத்தினரை உஷார்படுத்தினார். அதற்குள் முகமூடி கொள்ளையர்கள் தப்பிச்சென்றனர். 

இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இவை தற்போது வைரலாகி வருகிறது. மூன்று முகமூடி கொள்ளையர்களை விரட்டிய பஞ்சாப் பெண்ணுக்கு பாராட்டு குவிகிறது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வரும் நிலையில், பெண் போலீஸ் அதிகாரி ஏ.கே.சோஹி, ”கொள்ளை முயற்சியை விசாரித்து வருகிறோம். குற்றவாளிகளை அடையாளம் காண சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.துணிச்சலாகவும், சாதுர்யமாகவும் செயல்பட்ட மந்தீப் கவுரை, பலரும் பாராட்டி வருகின்றனர்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1841497959445209249

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback