கவனக்குறைவால் நடந்த நிகழ்வு தவறுக்கு மன்னிப்பு கோருகிறோம் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை -டிடி தமிழ் விளக்கம்!
இந்தி மாத கொண்டாட்டத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சி சென்னை தொலைக்காட்சி அலுவலகத்தில் நடைபெற்ற போது, விழா தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடியவர்கள் திட்டமிட்டு தவிர்க்க வேண்டுமென்ற நோக்கத்தோடு திராவிட நல் திருநாடு என்ற வார்த்தையை விட்டு விட்டு பாடியிருக்கிறார்கள்.
இந்நிலையில் -டிடி தமிழ் தொலைகாட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-
மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் சென்னை தூர்தர்ஷன் இன்று நடத்திய இந்தி மாத நிறைவு விழா மற்றும் பொன் விழாவின் ஒருபகுதியாக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார். தமிழ் தாய் வாழ்த்து பாடலின் போது கவனச்சிதறல் காரணமாக பாடியவர் ஒரு வரியை தவறவிட்டு விட்டார். கவனக்குறைவால் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். தமிழையோ அல்லது தமிழ் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் பாடியவர்களிடம் இல்லை வேண்டும் என்று இதனை யாரும் செய்யவில்லை. இது தொடர்பாக, மாண்புமிகு தமிழக ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்