உச்சநீதிமன்றத்தில் புதிதாக திறக்கப்பட்ட கையில் வாள் இல்லாத , கண்கள் கட்டப்படாத, புதிய நீதி தேவதை சிலை வைரல் புகைப்படம்
உச்சநீதிமன்றத்தில் புதிதாக திறக்கப்பட்ட கையில் வாள் இல்லாத , கண்கள் கட்டப்படாத, புதிய நீதி தேவதை சிலை வைரல் புகைப்படம்
உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கான நூலகத்தில் கண்கள் கட்டப்படாத வாள் இல்லாத நீதி தேவதை சிலை திறக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் அறிவுறுத்தலின்படி, இந்த சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சட்டம் பார்வையற்றது அல்ல என்பதை குறிக்கும் வகையில், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வடிவமைக்கப்பட்ட நீதிதேவதையின் கண்கள் கறுப்பு துணியால் கட்டப்பட்டும், இடது கையில் தராசு, வலது கையில் வாளும் இருக்கும். இது உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு பார்த்து நீதி வழங்கிட கூடாது என்பதையும், சரியான எடை போட்டு தீர்ப்பை வழங்க வேண்டும் என்பதை உணர்த்தவும், அநீதியை வீழ்த்திட வாளும் நீதிதேவதையின் அடையாளமாக கருதப்படுகிறது
அந்தவகையில், இந்த அடையாளத்தை மாற்றும் விதமாகவும் சட்டத்தின் முன் சமத்துவம் ' என்பதை வலியுறுத்திட சுப்ரீம் கோர்ட்டு நூலகத்தில் நடந்த விழாவில் புதிய நீதி தேவதை சிலையை தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார். அந்த புதிய நீதி தேவதை சிலை வாள், கண்கட்டு அகற்றப்பட்டு, கையில் அரசியலமைப்பு புத்தகம் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
அதில் சட்டம் குருடு அல்ல அது அனைவரையும் சமமாகப் பார்க்கிறது என்பதை உணர்ந்த கறுப்பு துணி அகற்றப்பட்டுள்ளது.
மேலும் இடது கையில் தராசுக்கு பதிலாக நம் அரசியல் சாசன புத்தகம் நம் நாட்டின் நீதிமன்றங்கள் அரசியலமைப்புச் சட்டங்களின்படி நீதி வழங்குகின்றன என்பதை வலியுறுத்துகிறது.
அதேபோல் இரு தரப்பு உண்மைகளும் வாதங்களும் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு நீதிமன்றங்களால் எடைபோடப்படுகின்றன என்ற கருத்தையும் வலியுறுத்தவே வலது கையில் நீதியின் தராசு உள்ளது என கூறப்படுகின்றது
Tags: இந்திய செய்திகள்