கடித்த பாம்பை பிடித்து தோளில் போட்டு மருத்துவமனைக்கு வந்த நபர் வைரல் வீடியோ
கடித்த பாம்பை பிடித்து தோளில் போட்டு மருத்துவமனைக்கு வந்த நபர் கடைசியில் நேர்ந்த சோகம் வைரல் வீடியோ
பீகார் மாநிலம் பாகல்பூரில் பிரகாஷ் மண்டல் என்பவரை கொடிய விஷமுள்ள கண்ணாடி வீரியன் பாம்பு ஒன்று கடித்துள்ளது
அதன்பின்பு அவர் அந்த விஷபாம்பினை பிடித்து தோளில் போட்டு கொண்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் . கழுத்தில் பாம்புடன் வந்த பிரகாஷை பார்த்து, சிகிச்சைக்கு வந்திருந்த நோயாளிகள், பணியாளர்கள் மற்றும் டாக்டர்கள் அலறி ஓடினர். அவரிடம் பாம்பை வெளியே விடும்படி மருத்துவர்கள் கூறிய போதும் அதை பொருட்படுத்தாமல் தனக்கு உடனே சிகிச்சை அளிக்கும்படி வற்புறுத்தினார்.
ஆனால் பாம்பை கையில் வைத்துக்கொண்டிருந்தால் சிகிச்சை அளிப்பதற்கு சிரமமாக இருக்கும் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவர் இறுதியாக பாம்பை விடுவித்தார். ஆனால், பாம்பு கடிபட்டு நீண்ட நேரத்துக்குப் பின் மருத்துவமனை வந்ததால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1847203995229564954
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ