Breaking News

குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட யூடியூபர் இர்பானை மன்னிக்க முடியாது அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அட்மின் மீடியா
0

குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட யூடியூபர் இர்ஃபானை மன்னிக்க முடியாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்

 


பிரபல யூடியூபர் இர்பான் கடந்தாண்டு ஹசீஃபா என்ற பெண்ணை திருமணம் செய்தார். ஹசீஃபா - இர்பான் துபாய்க்கு மனைவியை அழைத்து சென்று கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் பற்றி தெரிந்து கொண்டதோடு அதனை வீடியோவாக அவர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டிருந்தார். 

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இர்பானுக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. உடனே இர்பான் சம்பந்தப்பட்ட வீடியோவை டெலிட் செய்ததுடன் இச்செயலுக்காக மன்னிப்பு கேட்டு இருந்தார்

இந்நிலையில் இர்ஃபான் மீண்டும் தனது மனைவிக்கு தம்பதிக்கு கடந்த ஜூலை 24ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்தின்போது அறுவை சிகிச்சை அரங்கில் குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டியுள்ளார். அதனை வீடியோவாக பதிவு செய்து தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். 

கடந்த 2 நாட்களாக சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனையிடமும், தொப்புள் கொடியை வெட்டுவதற்கு அனுமதித்த மருத்துவர் நிவேதிதா உள்ளிட்டோர் தொடர்பாக மருத்துவத்துறை இயக்குனர் சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் மருத்துவத்துறையின் இணை இயக்குனர் இளங்கோவன் புகார் அளித்தார். யூடியூபர் இர்பான் மீதும் இந்த நிகழ்விற்கு அனுமதி அளித்த மருத்துவர் நிவேதிதா மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

யூடியூபர் இர்ஃபான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட அவரது செயல் மன்னிக்கவே முடியாது. எனவே அவர் மன்னிப்பு கேட்டாலும் மன்னிக்க முடியாது. அவரது செயல் கண்டிக்கத்தக்கது. 

குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது 

இர்ஃபான் விவகாரத்தில் மருத்துவர் நிவேதிதா மீதும் செம்மஞ்சேரி காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்களை காப்பாற்ற திமுக அரசு எப்போதும் நினைக்காது என்று தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback