Breaking News

தமிழக வெற்றிக்கழகத்தின் கொள்கையும் எங்கள் கொள்கையும் நேர் எதிரானது யாருடனும் கூட்டணி இல்லை சீமான்

அட்மின் மீடியா
0

தமிழக வெற்றிக்கழகத்தின் கொள்கையும் எங்கள் கொள்கையும் நேர் எதிரானது யாருடனும் கூட்டணி இல்லை சீமான்

திராவிடமும், தமிழ்த்தேசியமும் இரு கண்கள் என்கிறார் விஜய் இது  எங்கள் கொள்கையுடன் ஒத்துப்போகவில்லை எங்கள் கொள்கையும் அவர் கொள்கையும் நேர் எதிரானது என சீமான் கூறியுள்ளார்

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று நடைபெற்ற நிலையில், அந்த கூட்டத்தில் சுமார் 10 லட்சம் பேர் கலந்து கொண்டதாக கூறப்படுவது மற்ற அரசியல் கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், நேற்று விஜய் பேசியபோது, தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திராவிடம் மற்றும் மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ள பாசிச ஆட்சியை எதிர்த்து பேசியது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தமிழ் தேசியமும் திராவிடமும் இரு கண்கள் என்று அவர் கூறியதும் பலரையும் யோசிக்க வைத்துள்ளது. இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தமிழ் தேசியம் குறித்து பேசிவரும் நாம் தமிழர் கட்சியின் சீமான், திராவிடத்துக்கு எதிராகவும் பேசிவருகிறார். தமிழ் தேசியம் மற்றும் திராவிடம் இரு கண்கள் என்று விஜய் கூறும் கொள்கை எங்களுக்கு எதிரானது என்றும், அவருடைய கொள்கையும் எங்கள் கொள்கையும் ஒத்துப் போகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2026ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் விஜய் மற்றும் சீமான் இணைந்து போட்டியிடுவார்கள் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது இருவரும் கூட்டணியில் இணைய வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

தவெக கட்சித் தலைவர் விஜய் கூட்டணி ஆட்சி அறிவித்துள்ளதற்கு புதிய தமிழகம் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வலுவான கொள்கை கோட்பாடுகள் அவற்றை அடைவதற்கான போராட்டங்கள் முன் அனுபவங்கள் ஏதுமின்றி திரையுலகம், விளையாட்டு எனப் பிற துறைகளில் பெறக்கூடிய புகழ், விளம்பரம் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொண்டு அண்மைக்காலமாக பலரும் அரசியலுக்குள் நுழைகிறார்கள். 

தமிழகத்தை பொறுத்தமட்டிலும் திரை உலக புகழே பலரையும் ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்துள்ளது. கொள்கை கோட்பாடுகளை முழங்கி ஆட்சிக்கு வந்தவர்கள் நடைமுறையில் பெரும் தோல்வியுற்று விட்டனர்.

மேலும், அவர்களே தமிழ்ச் சமூகத்தின் பிரதான எதிரிகளாக பரிணமித்துவிட்ட நிலையில் விரும்பியும் விரும்பாமலும் புதிய சூழல்களை ஏற்றுக் கொள்ளும் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. அண்மையில் துவங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டை தம்பி விஜய் இன்று வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.! அவருக்குப் பாராட்டுக்கள்.

திராவிட மாடல் ஆட்சி என ஏமாற்றுகிறார்கள்: விஜய்தமிழ்நாட்டில் கடந்த 75 வருடத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு எனும் கூட்டணி ஆட்சி குறித்து வெளிப்படையாக பேசவும் இல்லை; அதற்கான பல சூழல்கள் ஏற்பட்ட பொழுதும் ஆட்சியில் எந்த கட்சிக்கும் பங்கு அளிக்கவுமில்லை. ஆனால், தம்பி விஜய் அவர்கள் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி முழக்கத்தை முன் வைத்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சி துவங்கப்பெற்ற நாள் முதல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மட்டும் சொல்லாமல், ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு அளிக்கும் கூட்டணி ஆட்சி முறையே தமிழகத்தில் நிலவும் அனைத்து அவலங்களுக்கும் தீர்வு என்பதை வலியுறுத்தி வருகிறது. 2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியே அளவு மாற்றத்தையும், குண மாற்றத்தையும் நிகழ்த்தும்.! அதுவே தமிழக மக்களுக்கு புதிய விடியலை உருவாக்கும்.!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback