கன மழை காரணமாக புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு
கன மழை காரணமாக புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், புதுச்சேரியில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில், இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வங்கக்கடல், அரபிக்கடல் என ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அரபிக் கடலில் அடுத்த 12 மணி நேரத்திலும் வங்கக் கடலில் அக்.22ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது.
அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து மேற்கு திசையை நோக்கி நகரும். மேற்கு, வட மேற்கு திசையில் நகரும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இந்திய பகுதியை விட்டு விலகிச் செல்லும் .இதனால் 19.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதனால்
கன மழை காரணமாக புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் இன்று சனிக்கிழமை(19/10/24) விடுமுறை அளிக்கப்படுகிறதுகல்வி அமைச்சர் ஆ. நமச்சிவாயம்
Tags: புதுச்சேரி செய்திகள்