பள்ளிவாசலில் ஜெய் ஸ்ரீராம் கோஷம் போட்டால் மத உணர்வுகளை புண்படுத்தாது - கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு!
பள்ளிவாசலில் ஜெய் ஸ்ரீராம் கோஷம் போட்டால் மத உணர்வுகளை புண்படுத்தாது... கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு!
கர்நாடகா மாநிலத்தில் மசூதி ஒன்றில் கடந்த செப்டம்பர் 24, 2023 அன்று இரவு சுமார் 10.50 மணியளவில் மசூதிக்குள் அத்து மீறி நுழைந்து "ஜெய் ஸ்ரீராம்" கோஷங்களை எழுப்பியதாகவும் மிரட்டல் விடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்த்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், மசூதிக்குள் "ஜெய் ஸ்ரீ ராம்" கோஷங்களை எழுப்புவது வகுப்புவாத பதற்றத்தைத் தூண்டாது என்று கூறி போலீசார் தொடுத்த குற்ற வழக்கை ரத்து செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி