Breaking News

தமிழக வெற்றிக்கழகத்தின் கொள்கைகள் முழு விவரம்

அட்மின் மீடியா
0

நடிகர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி நிறுவப்பட்டு, அதன் முதல் மாநாடு விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டுள்ளனர். 



அதனை தொடர்ந்து தவெக மாநாட்டில் கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் வாசிக்க தலைவர் விஜய் மற்றும் தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 

நமது நாட்டின் விடுதலைக்காகவும் நமது மக்களின் விடுதலைக்காகவும் தமிழ் மக்களில் வீரத்துடன் போராடி உயிர் நீற்ற எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னை தமிழ் மொழியை காக்க உயிர்த்தாகம் செய்த ஒலிப்போல் தியாகிகளை இலக்கையின் நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் மீதும் இறை ஆண்மை மீதும் நம்பிக்கை வைத்து அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதங்கள், இலக்கம், சமத்துவம் ஆகியவற்றை பேணி காக்கின்ற பொறுப்புள்ள தனி மனிதராக செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து என்றும் மக்கள் நல சேவகராக கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன். சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமையை களைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவருக்கும் சம வாய்ப்பு சம உரிமை கிடைக்க பாடுபடுவேன். பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ கொள்கையை கடைபிடிப்பேன் என்று குலமாக உறுதி கூறுகின்றேன் நன்றி” என உறுதி ஏற்றுக்கொண்டனர்.

தவெக மாநாட்டில் உரையாற்றிய அக்கட்சி தலைவர் விஜய், 

வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு சிலிர்ப்பில் உள்ளேன். அரசியலுக்கு நான் குழந்தைதான். பாம்பாக இருந்தாலும் பயமில்லை. பாம்பு தான் அரசியல்; பாம்பாக இருந்தாலும் பயமில்லை என்பதுதான் நம்முடைய நம்பிக்கை. இன்றைய அரசியலில் நான் கவனமுடன் தான் செயல்பட வேண்டும். மேடையில் இருப்பவரும் சரி, கீழே இருப்பவரும் சரி. அனைவரும் ஒன்றுதான். அறிவியல் மட்டுமல்ல அரசியலும் மாற வேண்டும். பெரியார் எங்கள் கொள்கை தலைவர். பெரியார் எடுத்த கடவுள் மறுப்பு கொள்கையில் எங்களின் உடன்பாடு இல்லை. யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் அண்ணாவின் கொள்கைதான் எங்கள் கொள்கைகளும். பாகுபாடு இல்லாத சமத்துவ சமுதாயத்தை உண்டாக்க.. உங்களுக்காக நான் வரேன்.

பெரியார் அம்பேத்கர் காமராஜர் வேலு நாச்சியார் அஞ்சலை அம்மாள் ஆகிய ஐந்து பேரை கட்சியின் கொள்கை வழிகாட்டிகளாக இருப்பார்கள் என தமிழக வெற்றிக்கழகம் அறிவிப்புஇந்த ஐந்து தலைவர்களின் கொள்கை அடிப்படையில் கட்சி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தாய்மொழி தமிழ், உலகத்திற்கான இணைப்பு மொழி ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையை தவெக பின்பற்றுகிறது. தமிழே ஆட்சி மொழி, வழக்காடு மொழி, வழிபாட்டு மொழி என அறிவிப்பு

மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கை: தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை என அறிவிப்பு

வர்ணாசிரம கொள்கைகள் எந்த வகையில் இருந்தாலும் அதை முழுமையாக தமிழக வெற்றிக் கழகம் எதிர்க்கும் என கொள்கை அறிவிப்பு

ஆளுனர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும் என அறிவிப்பு

மாநிலத் தன்னாட்சி உரிமை மீட்பு என்பதை தங்களது முக்கிய கொள்கை என அறிவிப்பு

ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சாதி முழுவதுமாக ஒழிக்கப்படும் காலம் வரை, அனைத்து பிரிவினருக்கும் அனைத்து துறைகளிலும் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்குவதே தவெகவின் சமதர்ம சமூக நீதி என அறிவிப்பு!

பழமைவாத பழக்கவழக்கங்களை ஒழிப்பதை தங்களது கட்சியின் முக்கிய கொள்கை என அறிவிப்பு

தமிழ்நாட்டில் மதுரையில் எப்படி சென்னை உயர்நீதிமன்ற கிளை இருக்கிறதோ அதேபோல மதுரையில் தலைமைச் செயலகத்தின் கிளை அமைக்கப்படும் என அறிவிப்பு

ஹிந்தி மொழி எதிர்ப்பை தங்களது முக்கிய கொள்கை என அறிவிப்பு

தமிழகத்தில் பனை மேம்பாடு மேற்கொள்ளப்படும் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் செயல் திட்டமாக அறிவிப்பு

பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளை வளர்ப்போம் என அறிவிப்பு

தமிழ்நாட்டின் பானமாக பதநீர் அறிவிக்கப்படும் என அறிவிப்பு

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு தமிழக வெற்றி கழகம் ஆதரவு என அறிவிப்பு

மாவட்டம் தோறும் காமராஜர் மாதிரி அரசு பள்ளி ஏற்படுத்தப்படும்.

அறிவியலுக்கு எதிரான சிந்தனைகள் எப்போதும் நிராகரிக்கப்படும்.

மது போதை இல்லாத தமிழகத்தை படைப்போம்.

சாதி, மத, நிறம், மொழி, இனம், பாலின பாகுபாடு இன்றி எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்.

மத நம்பிக்கை மற்றும் மத நம்பிக்கை இல்லாதவர்கள் சமமாக பார்க்கப்பட வேண்டும். என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் த.வெ.க கட்சியின் செயல்திட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் விஜய் ஆற்றிய உரை 50 நிமிட முழு வீடியோ Vijay Full speech video பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2024/10/vijay-full-speech-video.html

தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் தலைவர் விஜய் ஆற்றிய உரை முழு விவரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2024/10/blog-post_76.html

தமிழக வெற்றிக்கழகத்தின் கொள்கைகள் முழு விவரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2024/10/blog-post_45.html

தமிழக வெற்றிக் கழகம் கொள்கைப் பாடல் பார்க்க Tamilaga Vettri Kazhagam Ideology Song பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2024/10/tamilaga-vettri-kazhagam-ideology-song.html

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback