திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு விமானத்தை தரையிறக்க முடியாமல் தவிக்கும் விமானிகள்
திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுமார் 1 மணிநேரமாக விமானத்தை தரையிறக்க முடியாமல் 141 பயணிகளுடன் நடுவானில் வட்டமடித்துக் கொண்டுள்ளது
விமானம் பறக்கத் தொடங்கியவுடன் ஹைட்ராலிக் கோளாறு காரணமாக சக்கரங்களை உள் இழுக்க முடியாமல் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது
திருச்சியிலிருந்து சார்ஜாவிற்கு மாலை 6 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தொழில்நுட்ப கோளாறால் சிறிது நேரத்திலே மீண்டும் திருச்சிக்கே திரும்பியது
விமானத்தை இன்னும் 10 நிமிடங்களில் தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது மேலும் தீப்பற்றுவதை தவிர்க்க எரிபொருள் குறைந்த பிறகு விமானத்தை தரையிறக்க விமானிகள் திட்டம் வைத்துள்ளார்கள்
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி விமான நிலையத்தில் 18 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன, தற்போது திருச்சி விமான நிலையம் பரப்பரப்பாக உள்ளது
மேலும் தகவலுக்கு அட்மின் மீடியா செய்திகளை தொடர்ந்து பார்க்கவும்
Tags: தமிழக செய்திகள்