Breaking News

தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்க்கு அதிகாலையிலேயே குவிந்த தோழர்கள் வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0

விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது. இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த மாநாட்டில் விஜய் தனது கட்சியின் கொள்கை மற்றும் கட்சிக்கொடிக்கான விளக்கத்தை தெரிவிப்பதாக கூறியிருப்பதால் அவர் என்ன பேசப்போகிறார் என்பதற்கான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. 



பல்வேறு மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் மூலம் விக்கிரவாண்டிக்கு வந்த தொண்டர்கள் நெடுஞ்சாலை ஓரமாகவும், மாநாடு திடலை சுற்றியுள்ள பகுதிகளிலேயே இரவு முழுவதும் காத்திருந்தனர். அவ்வப்போது தளபதி, தளபதி என முழக்கமிட்டு வந்த தொண்டர்கள் அதிகாலையிலேயே மாநாடு திடலுக்கு வரத்தொடங்கினர். 

இன்று மாலைதான் கூட்டம் நடக்கிறது. ஆனால் நேற்று இரவே மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே வந்துள்ளனர். மக்கள் பலரும் அதிகாலையே குடும்பம் குடும்பமாக வந்தனர்.பொதுவாக அரசியல் கூட்டங்களுக்கு மக்கள் குடும்பமாக வர மாட்டார்கள். ஆனால் இந்த முறை விஜயின் முதல் மாநாட்டிற்கு விஜய் பார்க்க.. படம் பார்ப்பது போல மக்கள் கூட்டம் கூட்டமாக அவர் தொடங்கி உள்ளனர். 

இரவு முழுவதும் பணியில் இருந்த தனியார் பாதுகாவலர்கள் ஓய்வெடுக்கச் சென்று, புதிய பாதுகாவலர்கள் பணிக்கு வருவதற்கு உள்ளான இடைப்பட்ட நேரத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டு திடலுக்கு முண்டியடித்துக்கொண்டு நுழைந்தனர். 

கூட்டத்தின் முன் வரிசையில் அமர்வதற்கு மக்கள்.. இப்போதே மக்கள் பலர் வந்து அமர்ந்து உள்ளனர்.இதனால் பலர் சேர்களை உடைத்துக்கொண்டு இப்போதே அமர தொடங்கி உள்ளனர். அங்கே வைக்கப்பட்டு இருந்த பேரிகேட்கள் கூட உடைக்கப்பட்டு உள்ளன. 

தடுப்புகளை தாண்டிக் குடித்து உள்ளே சென்ற அவர்கள் மாநாடுக்கு அருகில் இருந்த அரங்குகளில் வைக்கப்பட்டிருந்த முன் இருக்கைகளில் இடம்பிடித்து அமர்ந்துகொண்டனர்.அத்துடன் விஜய் நடந்துவந்து தொண்டர்களை சந்திப்பதற்காக போடப்பட்டிருந்த ரேம்ப் வாக் மேடையிலும் அவர்கள் ஏற முயற்சித்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய பாதுகாவலர்கள், ஆயிரக்கணக்கான தொண்டர்களை சமாளிக்க முடியாமல் தினறினர். 

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1850369444339732899

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback