Breaking News

இடியும் நிலையில் ஓங்கூர் ஆற்றுப் பாலம் என்று பரவும் பழைய வீடியோ முழு விவரம்

அட்மின் மீடியா
0
இடியும் நிலையில் ஆற்றுப் பாலம் என்று பரவும் பழைய வீடியோ முழு விவரம்
 
 

பரவும் வீடியோ:-
 
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திண்டிவனம் அடுத்த ஓங்கூர் டோல்கேட் அருகே உள்ள ஓங்கூர் பழைய ஆற்றுப்பாலத்தில் விரிசல் என ஓர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகின்றது
 
உண்மை என்ன:-
 
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திண்டிவனம் அடுத்த ஓங்கூர் டோல்கேட் அருகே உள்ள ஓங்கூர் பழைய ஆற்றுப்பாலத்தில் விரிசல் என பரவும் வீடியோ 2 ஆண்டுகள் பழமையானது ஆகும்

அந்த தரைப்பாலம் கட்டி சுமார் 30 ஆண்டுகள் கடந்த நிலையில் கடந்த 27.07.2022 அன்று பாலத்தின் மையப் பகுதியில் விரிசல் ஏற்பட்டு வாகனங்கள் கடந்து சென்ற போது அதிர்வு ஏற்பட்டது இதனால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.அப்போது இது தொடர்பாக வீடியோ மற்றும் செய்திகள் பல ஊடகங்களில் வெளிவந்துள்ளது

ஆதாரம் இங்கே
 
https://www.youtube.com/watch?v=S6xEa7Upurg

ஆதாரம் இங்கே
 
https://www.youtube.com/watch?v=BZGDdQl4RvU
 
இந்த செய்தி பரவியதை அடுத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் பாலத்தை ஆய்வு செய்ததில், பாலம் அடிப் பகுதியில் உள்ள சிமென்ட் துாணுக்கு மேல் உள்ள பேரிங் பேட் சேதமடைந்தது தெரிய வந்தது. 
 
உடனடியாக அவ்வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு எதிர் திசையில் மாற்றி விடப்பட்டு பழுதடைந்த பாலத்தில் சேதமடைந்த பேரிங் பேட் அகற்றி புதிதாக பேரிங் பேட் பொருத்தி மீண்டும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.
 

அந்த பாலம் தற்போது நல்லநிலையில் உள்ளது யாரோ அந்த பாலம் தொடர்பான பழைய வீடியோவை தற்போது நடந்தது போல் ஷேர் செய்து வருகின்றார்கள் 

அதனை உண்மை என நமபி பலரும் அந்த செய்தியை ஷேர் செய்து வருகின்றார்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback