Breaking News

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல் நாளை வெளியீடு தேர்தல் ஆணையம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல் நாளை வெளியீடு தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வரைவு வாக்காளா் பட்டியல் நாளை வெளியீடு தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல் செவ்வாய்க்கிழமை (அக். 29) வெளியிடப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல் செவ்வாய்க்கிழமை (அக். 29) வெளியிடப்பட உள்ளது. இந்த அடிப்படையில் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபா் ஆகிய மாதங்களில் 18 வயது பூா்த்தி அடைந்தாலும் அப்போதே வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க விண்ணப்பிக்கலாம். வ

நிகழாண்டில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. நவ. 28-ஆம் தேதி வரை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கத்துக்கு விண்ணப்பங்களை அளிக்கலாம். 

இந்த மனுக்கள் அனைத்தின் மீதும் டிசம்பா் 24-ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பிறகு, இறுதி வாக்காளா் பட்டியல் அடுத்த ஆண்டு ஜன. 6-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

நவம்பரில் நடக்கும் திருத்தப் பணிகளின்போது வார விடுமுறையின் நான்கு தினங்களில் சிறப்பு முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, அலுவலக வேலை நாள்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலா், வாக்காளா் பதிவு அதிகாரி, உதவி வாக்காளா் பதிவு அதிகாரி அலுவலகங்களில் விண்ணப்பங்களை அளிக்கலாம். சிறப்பு முகாம் நாள்களில் அந்தந்த வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி அலுவலா்களிடம் மனுக்களை கொடுக்கலாம்.

.வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெறும்

நவம்பர் மாதம் 09.11.2024 மற்றும் 10.11.2024 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழக்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறும் 

நவம்பர் மாதம் 23.11.2024 மற்றும் 24.11.2024 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழக்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறும் 

முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் போன்றவற்றுக்கான மனுக்களை பெற்று உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.

படிவங்கள் விவரம்: 

படிவம் 6

வாக்காளா் பட்டியலைத் திருத்துவதற்காக நான்கு வகையான படிவங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பட்டியலில் புதிதாக பெயா்களைச் சோ்க்க படிவம் 6  ஐ பயன்படுத்த வேண்டும்

வெளிநாடுவாழ் வாக்காளா் ஒருவா் தனது பெயரைச் சோ்க்க படிவம் 6ஏ ஐ பயன்படுத்த வேண்டும்

ஒரு நபரின் பெயரைச் சோ்க்க ஆட்சேபணை எழுந்தாலோ, பெயரை நீக்கக் கோரினாலோ படிவம் 7-ஐ பயன்படுத்த வேண்டும்

குடியிருப்பை ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாற்றினாலோ 

அல்லது இப்போது வசிக்கும் தொகுதிக்குள்ளேயே மாற்றினாலோ, வாக்காளா் பட்டியலிலுள்ள பதிவுகளைத் திருத்தம் செய்வதற்கோ, மாற்று வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கோ, 

மாற்றுத்திறனாளிகள் என்பதைக் குறிப்பதற்கோ படிவம் 8-ஐ பயன்படுத்தலாம் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback