எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வில் சாதனை -பூமிக்கு திரும்பிய ராக்கெட்டை பிரமாண்ட கைகளால் கேட்ச் பிடித்து வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வில் சாதனை -பூமிக்கு திரும்பிய ராக்கெட்டை பிரமாண்ட கைகளால் கேட்ச் பிடித்த வைரல் வீடியோ
ஸ்பேஸ் எக்ஸ்ன், ஸ்டார்ஷிப் பிளைட்5 ராக்கெட் விண்ணில் செலுத்திய பிறகு, அதை ஏவுவதற்கு பயன்படுத்திய பூஸ்டரை மீண்டும் ஏவுதளத்தில் வந்தடைந்து புதிய சாதனை படைத்துள்ளது.எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் போகோ சிகாவில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் ஏவுதளத்தில் இருந்து நேற்று மாலை 5.54 மணியளவில் அந்நிறுவனம் தனது 5வது விமான சோதனையை நிகழ்த்தியது. இதில், ஸ்டார்ஷிப்பின் சூப்பர் ஹெவி என்று அழைக்கப்படும் மிகப்பெரிய முதல் நிலை பூஸ்டர் விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட இரண்டரை நிமிடங்களில் விண்கலத்தில் இருந்த சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட் திட்டமிட்டபடி அதிலிருந்து தனியாக பிரிந்தது.
ஸ்டார்ஷிப் விண்கலம் மிக துல்லியமான முறையில் புவியீர்ப்பு விசையை எதிர்த்து டெக்சாஸ் ஏவுதளத்துக்கு திரும்பி வந்தது அதனை ’மெக்காஸில்லா’ எனப்படும் மிகப்பெரிய லான்ச்பேட், தனது ‘சாப்ஸ்டிக்ஸ்’ எனப்படும் பிரம்மாண்ட கைகளால் கேட்ச் செய்து சாதனை படைத்துள்ளது
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1845489700435284137
Tags: வெளிநாட்டு செய்திகள்