Breaking News

வேலை செய்யும் வீட்டில் சிறுநீர் கலந்து உணவு தயார் செய்த பணிப்பெண் கைது வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

உ.பி., மாநிலம் காஜியாபாத்தில் வீட்டு வேலை செய்யும் ரீனா சமையல் பாத்திரங்களில் சிறுநீர் கழித்து அதில் மாவு பிசைந்து குடும்பம் முழுவதும் ரொட்டி செய்து கொடுத்துள்ளார்,சமையலறையில் மொபைல் பொருத்தி வீடியோ எடுக்கப்பட்டு, ரீனா கையும் களவுமாக பிடிபட்டு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்

 


உ.பி., மாநிலம் காஜியாபாத்தில் உள்ள அப்பார்ட்மெண்டில் வசித்து வரும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கடந்த சில நாட்களாக கல்லீரல் பிரச்சனை இருந்து வந்துள்ளது. மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்ற நிலையிலும் சரியாகவில்லை.

இதனால் சமையல் செய்யும் பணிப்பெண் சாப்பாட்டில் எதாவது கலந்து இருப்பார் என வீட்டினருக்கு சந்தேகம் எழுந்தது. அதனை கண்டுபிடிக்கக செல்போனில் கேமராவை ஆன் செய்து சமையல் அறையில் மறைத்து வைத்துள்ளார். 

அப்போது சமையல் வேலையும் செய்யும் பணிப்பெண் ரீனா என்பவர் சமையல் அறையில் ஒரு பாத்திரத்தில் சிறுநீர் கழிக்கிறார். சிறிது நேரம் கழித்து அதே பாத்திரத்தில் சமையல் செய்கிறார். 

இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர்  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணை கைது செய்து மேற்கொண்டு விசாரனை செய்துவருகின்றனர்

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1846762550341341413

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback