Breaking News

ஒரே நேரத்தில் வங்கக்கடல், அரபிக்கடலில் இரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது வானிலை ஆய்வு மையம்

அட்மின் மீடியா
0

ஒரே நேரத்தில் வங்கக்கடல், அரபிக்கடலில் இரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் மீண்டும் கனமழை 16, 17 ம் தேதிஆரஞ்ச் அலர்ட்

வங்கக்கடல், அரபிக்கடல் என ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அரபிக் கடலில் அடுத்த 12 மணி நேரத்திலும் வங்கக் கடலில் அக்.22ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. 

அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து மேற்கு திசையை நோக்கி நகரும். மேற்கு, வட மேற்கு திசையில் நகரும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இந்திய பகுதியை விட்டு விலகிச் செல்லும்.இதனால் 

18.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 

19.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

20.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 

21.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback