படியில் பயணம் நொடியில் மரணம் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் படிக்கட்டில் பயணித்த நபர் தவறி விழுந்து பலி வைரல் வீடியோ
வைகை எக்ஸ்பிரஸ் ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்தவர் அதே ரயிலில் சிக்கி உயிரிழப்பு
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த 24 வயதான பாலமுருகன் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லா பெட்டியின் படிக்கட்டில் அமர்ந்தபடி பயணம் செய்துள்ளார்.
இந்த ரயில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தைக் கடந்தபோது இளைஞரின் கால் நடைமேடையில் மோதி கீழே விழுந்தார். அப்போது நடைமேடையில் இழுத்துச் செல்லப்பட்டு ரயில் தண்டவாளாத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இதுகுறித்து உடனடியாக பணியில் இருந்த மாம்பலம் ரயில்வே காவல் துறையினர் பாலமுருகனின் சடலத்தை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக மாம்பலம் ரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பாலமுருகன் ரயிலில் இருந்து தவறி விழும் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1841774132142252282
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ