Breaking News

டெல்லி சிஆர்பிஎஃப் பள்ளி அருகே வெடித்த மர்ம பொருள் சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

டெல்லி ரோகினியில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளியில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது, ஆனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.CCTV Footage of the major blast which took place in Delhi’s Rohini area earlier today at the CRPF School. All angles being investigated by Delhi Police, NIA, NSG and Special Forensic Teams. No injuries were reported in the blast. Look the intensity of this blast!

டெல்லி ரோகினி பகுதியில்  பிரசாந்த் விஹார் பகுதியில் உள்ள சி ஆர்பிஎப் பள்ளி அருகே குண்டு வெடித்த சத்தம் கேட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இன்று காலை சுமார் 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பள்ளிக்கு மிக அருகே பயங்கர வெடிப்பு சத்தம் கேட்ட நிலையில், அதைத் தொடர்ந்து வெள்ளை நிற புகை சூழ்ந்துள்ளது. 

வெடிவிபத்தைத் தொடர்ந்து தடயவியல் குழுக்கள் மற்றும் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து குண்டுவெடிப்புக்கான காரணம் என்ன என்பதை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தேசிய பாதுகாப்புப் படை, வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் உள்ளிட்டோருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிநவீன கருவிகளுடன் அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளையும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த வெடிவிபத்து காரணமாக அருகில் நிறுத்தப்பட்டு இருந்த கார் கண்ணாடிகள் சேதமடைந்ததாக உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அருகாமையில் உள்ள கடைகளின் பெயர் பலகையும் சேதமடைந்துள்ளது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1847950347253223693

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback