Breaking News

தமிழக வெற்றிக்கழக மாநாடு சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

அட்மின் மீடியா
0

தமிழக வெற்றிக்கழக மாநாடு சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

விழுப்புரம், வி.சாலையில் நடைபெறும் மாநாடு முன்னிட்டு கூடுதலாக 3 லட்சத்திற்கும் மேல் வாகனங்கள் வரும் என்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் மாநாடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஜீரோ டிராபிக் முறையை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது, 

ஜீரோ டிராபிக் என்றால் வெளி வாகனங்களுக்கு அனுமதி இல்லை. தவெக மாநாட்டிற்கு தொடர்புடைய வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

 


திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருப்பி விடப்படுகின்றன

சென்னையிலிருந்து திருச்சி செல்லும் கனரக வாகனங்கள்  = திண்டிவனத்தில் இருந்து வில்லியனூர் வழியாக விழுப்புரம் செல்லலாம்

சென்னையிலிருந்து திருச்சி செல்லும் கார்கள் = திண்டிவனத்தில் இருந்து மயிலம், பெரும்பாக்கம் வழியாக விழுப்புரம் செல்லலாம்

திருச்சியில் இருந்து சென்னை வரும் பேருந்து, கார்கள் = செஞ்சி, திண்டிவனம் வழியாக  சென்னை வரலாம்

திருச்சியில் இருந்து வரும் கனரக வாகனங்கள்  = வில்லியனூர், திண்டிவனம் வழியாக சென்னை வரலாம்

போக்குவரத்து மாற்றம்:-

அதன்படி, திருச்சி நோக்கி செல்லும் அரசு பேருந்துகள் பேருந்துகள் திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருப்பி விடப்படுகின்றன. 

சென்னையிலிருந்து திருச்சி செல்லும் கனரக வாகனங்கள் திண்டிவனத்தில் இருந்து வில்லியனூர் வழியாக விழுப்புரம் செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னையிலிருந்து திருச்சி செல்லும் கார்கள் திண்டிவனத்தில் இருந்து மயிலம், பெரும்பாக்கம் வழியாக விழுப்புரம் செல்லும் வகையிலும், 

திருச்சியில் இருந்து சென்னை வரும் பேருந்து, கார்கள் செஞ்சி, திண்டிவனம் வழியாக சென்னை வரும் வகையிலும், திருச்சியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் வில்லியனூர், திண்டிவனம் வழியாக சென்னை வரும் வகையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback