உலகின் மிகவும் வறண்ட பாலைவனமான சஹாரா பாலைவனத்தில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் வீடியோ இதோ
உலகின் மிகவும் வறண்ட பாலைவனமான சஹாரா பாலைவனத்தில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் வீடியோ இதோ
சஹாரா பாலைவனத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்துள்ளது. இதன் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க கண்டத்தில் மொராக்கோவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய பாலைவனம் தான் சஹாரா பாலைவனம் மேலும் உலகின் மிகவும் வறண்ட பாலைவனமும் இந்த சஹாரா பாலைவனம் தான், இந்த பெருமைக்குரிய சஹாரா பாலை வனத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஓரிரு நாட்களில் பெய்ததால் சஹாரா பாலைவனத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் அங்குள்ள இரிக்கி என்ற ஏரி நிரம்பி காணப்படுகிறது. 50 ஆண்டுகளாக வற்றியிருந்த ஏரி தற்போது நீர் நிரம்பி காணப்படுகிறது.
பாலைவனத்தில் தேங்கிய வெள்ள நீர், ஆங்காங்கே குட்டைகளாக காட்சி அளிக்கும் படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1844947008387187152
Tags: தமிழக செய்திகள் வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ