அங்கீகாரமற்ற செவிலியர் பயிற்சி பள்ளியில் சேரவேண்டாம் நர்சிங் கவுன்சில் எச்சரிக்கை
அட்மின் மீடியா
0
அங்கீகாரமற்ற செவிலியர் பயிற்சி பள்ளியில் சேரவேண்டாம் நர்சிங் கவுன்சில் எச்சரிக்கை
இந்தியா முழுவதும் 4 ஆண்டுகள் கொண்ட பிஎஸ்சி நர்சிங், 3 ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ நர்சிங், 2 ஆண்டுகள் கொண்ட சான்றிதழ் உதவி செவிலியர் (ANM - Auxiliary Nurse Midwifery)படிப்புகள் உள்ளன.
12-ம் வகுப்பு தேர்ச்சி (10 2) கல்வித் தகுதியாக உள்ளது. மாணவர் சேர்க்கை தொடர்பாக அங்கீகரிக்கப்படாத செவிலியர் பள்ளிகள், கல்லூரிகளில் சேர வேண்டாம் என்று மத்திய, மாநில நர்சிங் கவுன்சில் தொடர்ந்துமாணவர்களை எச்சரித்து வருகிறது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியாரில் பிஎஸ்சி நர்சிங், டிப்ளமோ நர்சிங், டிப்ளமோ துணை செவிலியர் படிப்புகளை பயிற்றுவிக்க அங்கீகரிக்கப்பட்ட சுமார் 800 கல்வி நிறுவனங்கள் உள்ளன.
அந்த கல்வி நிறுவனங்களில் பட்டியல் https://www.tamilnadunursingcouncil.com/#/home என்ற தமிழக நர்சிங் கவுன்சில் இணையதளத்தில் உள்ளது. இதில் படித்தால் மட்டுமே கவுன்சிலில் பதிவு செய்து, உரிமம் பெற்று அங்கீகரிக்கப்பட்ட செவிலியர்களாக பணியாற்ற முடியும்.
தமிழக அரசும், தமிழக நர்சிங் கவுன்சிலும்தான் நர்சிங் பள்ளிகள், நர்சிங்கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குகிறது. ஆனாலும் பல்வேறு பெரிய, சிறிய மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள்போலியாக நர்சிங்பயிற்சிகளை நடத்தி டிப்ளமோ நர்சிங் மற்றும்சான்றிதழ்களை வழங்கி வருகின்றன.
செவிலியர் படிப்பதற்கான கல்வித்தகுதி 12-வகுப்பு தேர்ச்சி என்கிற நிலையில், அவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களை எல்லாம் செவிலியர் படிப்புகளுக்கு சேர்க்கின்றனர்.
இங்கு படித்தால் கவுன்சிலில் பதிவுசெய்து உரிமம் பெற முடியாது. அரசு மருத்துவமனைகளில் பணிகளில் சேர இயலாது. இதனால், அவர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடுகிறது.
அங்கீகாரம் இல்லாத கல்வி நிறுவனத்தில் படித்தால் உரிமம் கிடைக்காது. எனவே, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் செவிலியர் படிப்புகளை படிக்க வேண்டும்.