Breaking News

ஓடும் ரயிலில் ரீல்ஸ் வீடியோ சாகசம் மின்கம்பத்தில் மோதி கல்லூரி மாணவன் படுகாயம் பதைபதைக்க வைக்கும் வைரலாகும் வீடியோ

அட்மின் மீடியா
0
சென்னை ஓடும் ரயிலில் ரீல்ஸ் வீடியோ சாகசம் மின்கம்பத்தில் மோதி கல்லூரி மாணவன் படுகாயம் பதைபதைக்க வைக்கும் வைரலாகும் வீடியோ

சென்னை ராயபுரத்தில் ரயிலில் தொங்கியபடி பயணித்து, ரீல்ஸ் எடுத்த 16 வயது கல்லூரி மாணவன் மின்கம்பத்தில் மோதி படுகாயம் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி



சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த அபிலாஷ் என்பவர் பாரிமுனை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு படித்து வருகிறார்.

இவர் கல்லூரி முடிந்த பின் தனது நண்பர்களுடன் மின்சார ரயிலில் பயணித்துள்ளார். அப்போது ரயிலின் படிக்கட்டில் தொங்கியபடி சாகசம் செய்துள்ளார்.இதனை அவருடன் இருந்த நண்பர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்தபடி வந்துள்ளார்.அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் மின் கம்பத்தில் அடிப்பட்டு ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்டார் அபிலாஷ். 

இதனால் பதற்றமடைந்த அவரது நண்பர்கள் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி சம்பவ இடத்திற்கு வந்த பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் அபிலாஷ் சுய நினைவின்றி கிடந்துள்ளார். அபிலாஷ் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். 

இந்நிலையில், அபிலாஷ் ரயிலில் பயணம் செய்தபோது விபரீத செயலில் ஈடுபடுவதும், அப்போது மின் கம்பத்தில் மோதி தூக்கி எறியப்படும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.இந்த சம்பவம் குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1845354521729364398

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback