சிலிண்டரை மாற்றும் போது ஏற்பட்ட தீ விபத்து இளம்பெண் உயிரிழப்பு முழு விவரம்
சென்னை மடிப்பாக்கத்தில் சிலிண்டர் விபத்தில் தீக்காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை மடிப்பாக்கம் அருகே குபேரன் நகரை சேர்ந்தவர் வின்சி புளோரா (வயது 26). இவர் சேலத்தை சோ்ந்த இவர் சென்னையில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வின்சியின் வீட்டில் சமையல் சிலிண்டர் தீர்த்துவிட்டதால் தன்னுடன் பணிபுரியும் மணிகண்டன் என்பவரை தொடர்பு கொண்டு சிலிண்டர் வேண்டும் என கேட்டதன் பேரில் மணிகண்டன் தனது வீட்டில் இருந்த சிலிண்டரை வின்சி வீட்டிற்கு சென்று கொடுத்துள்ளார் , மேலும் காலி சிலிண்டரை மாற்றும் போது எதிர்பாரதவிதமாக பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்துள்ளது
அருகில் இருந்தவர்கள் வீட்டிற்குள் வந்து பார்த்த போது வின்சி மற்றும் மணிகண்டன் இருவரும் பலத்த தீக்காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனா்.
இதையடுத்து தீக்காயம் அடைந்த 2 பேரும் உடனடியாக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் வின்சிக்கு உடல் முழுவதும் 60 சதவீத தீக்காயமும் சிலிண்டர் கொடுத்த மணிகண்டனுக்கு 45 சதவீத தீக்காயமும் ஏற்பட்டது. இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று இரவு வின்சி புளோரா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து வின்சியின் உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்படுகிறது. மணிகண்டனுக்கு தீவிர சிகிக்கை கொடுக்கப்பட்டு வருகிறது.
Tags: தமிழக செய்திகள்