Breaking News

தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் தலைவர் விஜய் ஆற்றிய உரை முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் தலைவர் விஜய் ஆற்றிய உரை முழு விவரம்

நடிகர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி நிறுவப்பட்டு, அதன் முதல் மாநாடு விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் இன்று நடைபெற்று வருகிறது. 

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழி

நமது நாட்டின் விடுதலைக்காவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து வீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீதும், இறையான்மை மீதும் நம்பிக்கை வைத்து அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனி மனிதராக செயல்படுவேன்.மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப்பாதையில் பயணித்து சமூக நல சேவகராக கடமையாற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன். சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் கலைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப்பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைபிடிப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்” - என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டுள்ளது!

தவெக கோட்பாடு:-

மக்கள் யாவரும் பிறப்பால் சமமே... பாரபட்சமற்ற சமநிலைச் சமூகம் படைப்பதே கோட்பாடு...தவெக குறிக்கோள்:மதம், சாதி, நிலம், இனம், பாலின அடையாளம், பொருளாதாரம் என்கிற தனி அடையாளங்களுக்குள் மனித சமூகத்தை சுருக்காது தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களின் தனிமனித, அரசியல், பொருளாதார உரிமைகளை நிலை நிறுத்தி எல்லோருக்கும் எல்லாமுமான சமநிலை சமூகம் உருவாக்குவது தவெக குறிக்கோளாகும்.

மாநாட்டில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய்,

ஒரு குழந்தை முதன்முதலாக அம்மா என சொல்லும்போது அம்மாக்கு ஒரு சிலிர்ப்பு வரும். சிலிர்ப்பு எப்படி இருந்தது என அம்மாவால் சொல்ல முடியும். அந்த உணர்வு எப்படி இருந்தது என குழந்தையைக் கேட்டால் அந்த குழந்தை எப்படி சொல்லும். குழந்தைக்கு சிரிக்க மட்டும்தானே தெரியும்.. சிலிர்ப்பை சிலாகித்து வார்த்தைகளில் சொல்ல அந்தை குழந்தைக்கு தெரியாதில்லையா.. அப்படி ஒரு உணர்வோடுதான் நான் உங்கள் முன்னால் நிற்கிறேன்.

அம்மாவிடம் கூட தன் உணர்வை சொல்லத்தெரியாத குழந்தை முன் பாம்பு ஒன்று படமெடுத்தால் என்ன நடக்கும்.தன் அம்மாவைப் பார்த்து சிரிக்கும் அதே சிரிப்புடன், பாம்பை பிடித்து விளையாடும்.. பாச உணர்வை மட்டுமே சொல்லத்தெரியாத குழந்தைக்கு பயத்தை மட்டும் எப்படி சொல்லத்தெரியும்...இங்கு அந்த பாம்புதான் அரசியல். அதை கையில் பிடித்து விளையாட ஆரம்பிப்பது உங்கள் தளபதி!” என்றார்

கட்சி ஆரம்பித்ததால் என்னை கூத்தாடி என விமர்சிப்பார்கள். திராவிட இயக்கம் வளர்ந்ததே சினிமா என்ற கூத்தாடிகளால்தான். உழைத்து உழைத்து மேலே வந்தவன் தான் இந்த கூத்தாடி. என்னிடம் இருப்பது உண்மை, நேர்மை, உழைப்பு. சினிமா வாழ்க்கை உச்சத்தில் இருந்தபோதும், உங்கள் விஜய்யாக உங்களை மட்டுமே நம்பி வந்துள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்து நீங்கள் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளீர்கள்.

என்னை கூத்தாடி விஜய் கூத்தாடி விஜய் என்று சொல்கிறார்கள். நம்ம ஊர் வாத்தியார் எம்ஜிஆரையும் ஆந்திரா ஊரு வாத்தியாரே என் டி ஆரும் கட்சி தொடங்கிய போது அவரையும் இப்படித்தான் கூத்தாடி என்றார்கள். கூத்தாடி என்றால் என்ன கெட்ட வார்த்தையா கூத்து இந்த மண்ணின் அடையாளம். என் துறையின் உச்சத்தில் இருக்கும்போதும் அந்த ஊதியத்தை உதறி தள்ளிவிட்டு உங்களுக்காக வந்திருக்கிறேன்

ஆரம்பத்தில் நாமளும் இந்த சினிமாவுக்குள்ள வந்தப்போ மூஞ்சி சரியில்லை, ஆளு சரியில்லை, முடி சரியில்லை, நட சரியில்லை இப்படியெல்லாம் அசிங்கப்படுத்துனாங்க. அவமானப்படுத்துனாங்க. ஆனால், கொஞ்சம் கூட கலங்காமல் ஒவ்வொரு வாய்ப்புக்காகவும் ஒவ்வொரு சூழலுக்காகவும் சுத்தி சுத்தி சுழன்று சுழன்று உழைச்சு மேல வந்தவன் தான் இந்தக் கூத்தாடி.

அப்பகூட உழைப்பு மட்டும் தான் என்னோடது. அதன்மூலமாக எனக்குக் கிடைச்ச மத்த எல்லாத்துக்கும் காரணம் நான் இல்லை. நீங்க தான் ஒவ்வொரு கட்டத்திலேயும் ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒரு ட்ரான்ஸ்பெர்மேஷன் வரும்பாருங்க. சாதாரண இளைஞராக இருந்த விஜய் நடிகனாக மாறினான். அந்த நடிகன் வெற்றிபெற்ற நடிகனாக மாறினான். அந்த வெற்றிபெற்ற நடிகன் ஒரு பொறுப்புள்ள மனிதனாக மாறினான். அந்தப் பொறுப்புள்ள மனிதன் தொண்டனாக மாறினான். இன்னிக்குப் பொறுப்புள்ள தொண்டனாக இருப்பவன், நாளைக்கு.. அதை நான் சொல்லத் தேவையில்லை.

ஒவ்வொரு கட்டத்திலேயும் ட்ரான்ஸ்பெர்மேஷனில் மாறினது என்னவோ நான் தாங்க. மாத்துனது நீங்க தான். மக்கள் தான். என் பொறுப்பு என்ன தீர்மானிச்சது நீங்கள் தான்.

பிளவுவாதம், ஊழல் மலிந்த அரசியல்தான் தவெகவின் எதிரி. நம் கொள்கைகளை அறிவித்துவிட்டதால் கதறல் சத்தம் இனி அதிகமாக கேட்கும். சிறுபான்மை, பெரும்பான்மை என சீன் காண்பிக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சி என ஏமாற்றுகிறார்கள். பெரியார், அண்ணா பெயரை சொல்லி கொள்ளையடிக்கும் ஒரு குடும்பம் தான் எங்களின் அரசியல் எதிரி. 

நமது அரசியல் போட்டி திமுக தான். கருத்தியல் பேசி கபட நாடகம் போடுவார்கள், அந்த கரெப்சன் கபடதாரிகள்தான் இப்போது நம்மை ஆண்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஊழல் செய்பவர்கள் கருத்தியல் பேசி கொள்கை நாடகம் போடுவார்கள். அதுக்கு முகமே இருக்காது. முகமூடிதான் முகமே! இப்படி முகமூடி போட்ட கரெப்சன் கபடதாரிகள்தான் இப்ப நம்ம கூடவே இருந்துகிட்டு இப்போ இங்க நம்ம ஆண்டுகொண்டும் இருக்கிறார்கள்..

நீட் விவகாரத்தில் அனிதாவின் மரணம் பெரும் வேதனையை ஏற்படுத்தியது. வீடு, உணவு, வேலை இது மூன்றுமே அடிப்படை தேவைதான்.அனைவருக்கும், அனைத்தும் சமம் என்பதே அடிப்படை கொள்கை. ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரத்தை எதிர்ப்பதும் நமது கொள்கை அவர்களும் நம்முடைய எதிரிகள் பிளவுவாத சக்திகளும் நமக்கு பெரிய எதிரி. இவர்கள் மதம்பிடித்த யானை மாதிரி. நம்மள பாத்து யாரும் விசிலடிச்சான் குஞ்சுன்னு சொல்லிட கூடாது. செயல்தான் முக்கியம்

திராவிட மாடல் ஆட்சி என ஏமாற்றுகிறார்கள் அவங்க பாசிச ஆட்சி என்றால், நீங்கள் பாயச ஆட்சியா? பெரியார், அண்ணா பெயரை சொல்லி, திராவிட மாடல் என்ற பெயரில் குடும்ப ஆட்சியை நடத்துகிறார்கள் அவர்களும் நம்முடைய கொள்கை எதிரி தான் வீடு, உணவு, வேலை இவை மூன்றுமே அடிப்படை தேவை இதை கொடுக்க முடியாத அரசு, இருந்தாலென்ன? இல்லாவிட்டாலென்ன?

கொள்கை கோட்பாட்டு அளவுல திராவிடத்தையும் தமிழ்தேசியத்தையும் நாம பிரிச்சு பார்க்கப்போறதில்லை.

கூட்டணி:-

நம்மள நம்ம செயல்பாட்ட நம்பி நம்மலோட சிலபேர் வரலாம் இல்லையா? அதுக்கான அரசியல் சூழல் உருவாகலாம் இல்லையா? அவங்களையும் அன்போட அரவணிக்கனும் இல்லையா? நம்மள நம்பி வரவங்கள அரவணிச்சுதான பழக்கம்.. நம்மள நம்பி நம்மகூட களமாட வரவங்களுக்கும் ஆட்சி அதிகாரத்துல பங்களிப்பு தந்து அதிகாரப்பகிர்வு செய்யப்படும். கூட்டணிக்கு வருபவர்களை அரவணைப்போம்; கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்குண்டு என கூறினார்

குட்டிகதை:-

கெட்ட பய சார் அந்த சின்ன பையன் 

ஒரு நாட்டுல பெரிய போர் வந்ததாம்.. பவர் ஃபுல்லான தலைமை இல்லாததால் பச்சப்புள்ள கையில பொறுப்பு இருந்ததாம். அதனால அந்த நாட்டுல இருந்த பெரும் தலைகள் பயத்துல இருந்தாங்களாம். அந்த சின்ன பையன் நாட்டுடைய படையை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு 'போர்க்களம் போலாம்' என சொன்னார்களாம்.. அப்போது அந்த பெருந்தலைகள் நீ சின்ன பையன் என்றெல்லாம் சொன்னார்களாம். எந்த பதிலும் சொல்லாமல் போருக்கு தனியாக தன் படையுடன் சென்ற அந்தப் பையன் அடுத்து என்ன செய்தான், என்ன நடந்ததென தெரியாதவங்க கேட்டு தெரிஞ்சுக்கோங்க! சங்க இலக்கியத்தில் இதை சொல்லியுள்ளார்கள். ஆனா.... கெட்டப் பய சார் அந்த சின்னப்பையன்! என குட்டிகதை கூறினார்

பெண்கள், குழந்தைகள், முதியவர்களின் பாதுகாப்பிற்கு தனித்துறை உருவாக்க வேண்டும். 2026 ஆம் ஆண்டு ஒரு புதிய அரசியல் களத்தில் புத்தாண்டு. யாரையும் தாக்குவதற்கு இங்குவரவில்லை. தவெக தொண்டர்களின் கடுமையான உழைப்பை நம்பி மக்கள் தனிப்பெரும்பான்மை வழங்குவார்கள். யாரையும் தரக்குறைவாக, தகாத வார்த்தைகள் பேச நாங்கள் வரவில்லை.Decent அரசியல் செய்ய வந்துள்ளோம்.” என்றார்.

விஜய் பேசிய முழு வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1850575481730662463

தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் விஜய் ஆற்றிய உரை 50 நிமிட முழு வீடியோ Vijay Full speech video பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2024/10/vijay-full-speech-video.html

தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் தலைவர் விஜய் ஆற்றிய உரை முழு விவரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2024/10/blog-post_76.html

தமிழக வெற்றிக்கழகத்தின் கொள்கைகள் முழு விவரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2024/10/blog-post_45.html

தமிழக வெற்றிக் கழகம் கொள்கைப் பாடல் பார்க்க Tamilaga Vettri Kazhagam Ideology Song பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2024/10/tamilaga-vettri-kazhagam-ideology-song.html

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback