Breaking News

தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்த பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்த பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு


தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்திடவும் மற்றும் இதர பணிகளைக் கண்காணித்திடவும் மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்- 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொது மக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகாலப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ளவும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் சிலரை, சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். 

அதன்படி. வருவாய் மாவட்ட வாரியாக பின்வரும் அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

திருநெல்வேலி மாவட்டத்திற்கு மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு அவர்களையும்; 

தேனி மாவட்டத்திற்கு மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்களையும்; 

திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் திரு. எ.வ. வேலு அவர்களையும்; 

தருமபுரி மாவட்டத்திற்கு மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களையும்; 

தென்காசி மாவட்டத்திற்கு மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்களையும்; 

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்களையும்; 

நீலகிரி மாவட்டத்திற்கு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்களையும்:

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி அவர்களையும்; 

கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு வி. செந்தில் பாலாஜி அவர்களையும்; 

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு. ஆர். காந்தி அவர்களையும்; 

பெரம்பலூர் மாவட்டத்திற்கு மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ். சிவசங்கர் அவர்களையும்; 

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களையும்; 

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் திரு. சிவ.வீ. மெய்யநாதன் அவர்களையும் 

நியமித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback