வங்க தேசத்தில் உள்ள காளி கோவிலுக்கு பிரதமர் மோடி பரிசளித்த வெள்ளியால் ஆன தங்கமுலாம் பூசப்பட்ட கிரீடம் திருட்டு சம்பவத்தின் சிசிடிவி வீடியோ
வங்க தேசத்தில் உள்ள காளி கோவிலுக்கு பிரதமர் மோடி பரிசளித்த வெள்ளியால் ஆன தங்கமுலாம் பூசப்பட்ட கிரீடம் திருட்டு சம்பவத்தின் சிசிடிவி வீடியோ
வங்கதேசத்தின் சத்கிரா சியாம்நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஜெசோரேஷ்வரி காளி தேவி கோவில் அமைந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தனது வங்காளதேச சுற்றுப்பயணத்தின்போது இந்தக் கோவிலுக்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள காளி தேவி சிலைக்கு தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி கிரீடம் ஒன்றை பரிசாக வழங்கினார்.
இந்நிலையில், பிரதமர் மோடி பரிசாக வழங்கிய கிரீடம் தற்போது திருடப்பட்டுள்ளது. நேற்று கோவில் பூசாரி தினசரி பூஜையை முடித்துவிட்டு கிளம்பிய பின் மதியம் 2 மணி முதல் 2.30 மணிக்குள் இந்த திருட்டு நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்கிராவின் ஷியாம்நகரில் உள்ள ஜெசோரேஸ்வரி கோவிலில் இருந்து காளி தேவியின் கிரீடம் திருடப்பட்டுள்ளது. இந்த கிரீடம் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 2021 இல் கோயிலுக்குச் சென்றபோது பரிசாக அளித்ததாக தி டெய்லி ஸ்டார் தெரிவித்துள்ளது.
நேற்று மதியம் 2.00 மணிக்கும் 2.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், கோவில் பூசாரி திலீப் முகர்ஜி அன்றைய வழிபாட்டைத் தொடர்ந்து வெளியேறிய பின்னர் இந்த திருட்டு நடந்துள்ளது.
இந்த கோயில் சத்கிராவின் உபாசிலாவின் ஷியாம் நகரில் உள்ள ஈஸ்வரிபூரில் அமைந்துள்ளது.12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அனாரி என்ற பிராமணரால் இந்தக் கோயில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்து புராணங்களின்படி, 51 பீடங்களில், சதி தேவியின் உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்கள் விழுந்த இடமே ஈஸ்வரிபுரத்தில் உள்ள கோயிலாகும்,
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ