Breaking News

நிர்வாகிகளுக்கு அரசியல் பயிலரங்கம் மற்றும் கலந்தாய்வு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நாளை(அக்.18)விஜயின் த.வெ.க. நிர்வாகிகளுக்கு அரசியல் பயிலரங்கம் மற்றும் கலந்தாய்வு
 
 

தலைமை நிலையச் செயலக அறிவிப்பு கழகத் தோழர்களுக்கு வணக்கம். நம் கழகத் தலைவரின் அறிவுறுத்தல்படி. நமது முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழா குறித்து, மாநாட்டுக் குழுக்கள் மற்றும் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு அரசியல் பயிலரங்கம் மற்றும் மாநாட்டுப் பணிகளுக்கானக் குழுக்களின் நெறிமுறைகள் குறித்த கலந்தாய்வு, 
 
சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள அம்மம்பாளையம் கொங்கு திருமண மாளிகையில், 18.10.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. 
 
இப்பயிலரங்கில் அரசியல் திறனாய்வாளர்கள் கலந்துகொண்டு கீழ்க்கண்ட தலைப்புகளில் கருத்துரை வழங்க உள்ளனர். 
 
பொருள்: 
 
1.இதுவரை தமிழகத்தில் நடந்த மாநாடுகள் குறித்த பார்வை 
 
2. கொள்கைகள் மற்றும் கருத்தியலை அணுகும் முறை 
 
3.சமூகப் பொறுப்புணர்வு, கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் மாநாட்டைச் சிறப்பிப்பது 
 
4.வெற்றிக் கொள்கைத் திருவிழா -விளக்கவுரை 
 
5.மாநாட்டுக் குழுக்களுக்கான கலந்தாய்வு 
 
எனவே, இக்கலந்தாய்வில் அனைத்துக் குழுக்களின் தலைவர்கள். ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தமிழக, புதுச்சேரி மாநிலங்களின் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback