ரயில் வரும் போது செல்பி எடுக்க முயன்ற சிறுவர்கள் மீது ரயில் மோதி விபத்து வைரலாகும் வீடியோ
வங்கதேசத்தில் சோகம் - ரயில் வரும் போது செல்பி எடுக்க முயன்ற சிறுவர்கள் மீது ரயில் மோதி விபத்து வைரலாகும் வீடியோ
பங்களாதேஷில் 24 ம் தேதி உள்ள ரங்பூரில் உள்ள சிங்கிமாரா பிரைட் பகுதியில் சிறுவர்கள் சிலர் சேர்ந்து ரயில் வரும்போது செல்ஃபி, வீடியோ எடுக்க முயற்சி செய்கின்றனர். அப்போது சிறுவர்கள் நடனமாடுவது மற்றும் டிராக்கில் போஸ் கொடுப்பது என வீடியோ எடுப்பதில் மூழ்கி இருக்கின்றனர்கள்.அப்போது தண்டவாளத்திற்கு அருகே அவர்கள் நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த ரயில் சிறுவன் மீது மோதியது.
மோதியதைத் தொடர்ந்து, காயமடைந்த சிறுவன் லிகான் என அடையாளம் காணப்பட்டு, ரங்பூர் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார்
அந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக சிறுவன் உயிர்பிழைத்துள்ளான்.அவர் தற்போது மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1850904840626708895
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ