ஹைதராபாத்தில் மக்கள் பட்டாசு வாங்கிகொண்டிருந்தபோது கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து வைரல் வீடியோ
ஹைதராபாத்தில் மக்கள் பட்டாசு வாங்கிகொண்டிருந்தபோது கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து வைரல் வீடியோ
ஹைதராபாத்தில் உள்ள அபிட்ஸ் பகுதியில் பராஸ் பட்டாசு நிறுவனம் முறையான உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக இயங்கி வந்துள்ளது
நேற்று மாலை மக்கள் அந்த பட்டாசு கடையில் பட்டாசுகளை வாங்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாரத விதமாக தீடிரென ஏற்பட்ட தீ விபத்தால் மக்கள் அலறியடித்து வேகமாக ஓடினர், இதனால் கூட்டம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது
பட்டாசுகள் வெடித்து நாலாபுறமும் வெடித்து சிதறியது, அதில் ஏற்பட்ட பயங்கர தீ, அருகில் உள்ள உணவகத்திற்கும் வேகமாக பரவியது.
சம்பவம் அறிந்து விரைந்து வந்த 3 தீயனைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீ பரவாமல் தடுக்க தண்ணீர் அடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்
இரவு 10.45 மணியளவில் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டதாக அதிகாரிகள் உறுதி செய்தனர். மேலும் இந்த தீ விபத்தில் ஒரு பெண்ணுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன,
மேலும் கடைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த எட்டு கார்கள் எரிந்து நாசமாகின என்று போலீசார் தெரிவித்தனர். தீ விபத்துக்கான சரியான காரணம் தெரியவில்லை,
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1850719360501059834
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ